மீன் வாங்கினாலே நம்ம செய்றது மீன் குழம்பு, மீன் வருவல் தான் ஆனா ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமாக மீன் புட்டு தான் செஞ்சு பார்ப்போமே. அதுக்கு இன்னைக்கு நம்ம கானாங்கெளுத்தி மீன்ல தான் சூப்பரான மீன் புட்டு செய்ய போறோம். இந்த மீன்ல நம்ம புட்டு செஞ்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். மீன் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா மீன் வறுவல் வைக்காம ஒரு தடவை இந்த மீன் புட்டு செஞ்சு பாருங்க சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும்.
முக்கியமாக வீட்டிற்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே சிம்பிளா செய்யக்கூடிய இந்த மீன் புட்டு ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான ஈஸியான கானாங்கெளுத்தி மீன் புட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கானாங்கெளுத்தி மீன் புட்டு | Fish Puttu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 கானாங்கெளுத்தி மீன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- மீனை கழுவி சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- அதன் பிறகு மீனில் உள்ள முட்களை நீக்கி விட்டு சிறிது சிறிதாக பிச்சு போட்டு கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகுளுந்து மரத்து கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக பத்து நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.
- இறுதியாக மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கானாங்கெழுத்தி மீன் புட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை வஞ்சரம் மீன் வாங்கினால் இப்படி ஒரு தரம் ருசியான பொடிமாஸ் பண்ணி பாருங்கள்!