- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Soup
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். பொதுவாக சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும்.
சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், தக்காளி சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், மற்றும் தக்காளி சூப் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று காண இருப்பது ஒரு அட்டகாசமான முறையில் செய்யப்படும் மீன் சூப். பருவநிலை கால மாற்றத்துக்கு ஏற்ப நோய்கள் நம்மை அண்டிக்கொள்ளும், இதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது சிறந்தது. அந்த வகையில் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீன் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அது மட்டுமின்றி மீன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும். பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மீன் சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். இதுவரை மட்டன், சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் குடித்து இருப்பீங்க. இன்று மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!
Ingredients
Method
முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி முள் அனைத்தையும் நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மல்லி, சீரகம், மிளகு, தக்காளி அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, பட்டை சேர்த்து பொரிந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு தேவையான அளவை விட ஒரு மடங்கு தண்ணீர் அதிகமாக வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் விசில் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான மீன் சூப் தயார்.






