Advertisement
சைவம்

வாரம் ஒரு முறையாவது ருசியான பூண்டு கறி ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கறி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கறி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த கறியை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய, அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு கறி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பூண்டு கறி எப்படி செய்வது என இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். வழக்கமாக வைக்கும் சாம்பார், ரசத்தால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருக்கும். எதாவது வித்யாசமான குழம்பு செய்யலாம் என்று தோன்றினாலும் அதற்கு செலவாகும் நேரம் நினைத்து, அதை செய்யமாட்டோம். இதனால் 10 நிமிடங்களில் ஈசியாக செய்யும் பூண்டு கறி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

பூண்டு கறி | Garlic Curry Recipe In Tamil

Print Recipe
பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும்
Advertisement
பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கறி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கறி செய்து சாப்பிடலாம்.
Advertisement
அதிலும் இந்த கறியை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Garlic Curry
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 149

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் பூண்டு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்

Instructions

  • முதலில் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு‌ காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் கறிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும். பூண்டு கறி கொதித்து எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பூண்டு கறி தயார். இது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்ட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 450 g | Calories: 149kcal | Carbohydrates: 3.3g | Protein: 6.4g | Fat: 1.5g | Saturated Fat: 0.2g | Sodium: 17mg | Potassium: 401mg | Vitamin A: 1.17IU | Vitamin C: 31.2mg | Calcium: 181mg

இதனையும் படியுங்கள் : ருசியான பூண்டு வெந்தய பொங்கல் இப்படி செய்து பாருங்க உடலுக்கு மிகவும் நல்லது, மருத்துவ குணங்கள் அடங்கியது இந்த பொங்கல்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

18 மணி நேரங்கள் ago