தோசை, இட்லி போன்றவைக்கு ரெண்டே நிமிஷத்துல இந்த பூண்டு கார சட்னி செஞ்சு சாப்பிடுங்க!!

- Advertisement -

பொதுவா எல்லாருமே இட்லி தோசைக்கு ஒன்னு தக்காளி கார சட்னி பண்ணுவாங்க இல்ல தேங்காய் சட்னி செய்வாங்க. தேங்காய் சட்னி செய்வது என தான் ஈசியா இருந்தாலும் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி சாப்பிடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஆனா காரச்சட்னி சாப்பிட்டால் பெருசா எந்த பாதிப்பும் இருக்காது ஆனா காரச்சட்னி செய்வதற்கு தக்காளி வெங்காயத்தை வதக்கி அரைச்சு செய்யணும் அப்படின்னு கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கும். ஆனா இனிமேல் உங்களுக்கு காரச்சட்னி சாப்பிடனும் போல இருக்கு அது உன் ரொம்ப சீக்கிரத்திலேயே சாப்பிடணும் போல இருக்குன்னா வெங்காயம் பூண்டு எதுவுமே உரிக்காமல் டக்குனு இந்த சூப்பரான சட்னியை செஞ்சு சாப்பிடுங்க.

-விளம்பரம்-

நல்லா சுடச்சுட ஆவி பறக்க இட்லி சுட்டு அதுக்கு இந்த சட்னி மட்டும் வச்சு சாப்பிட்டீங்கன்னா எத்தனை இட்லி சாப்பிடுறீங்கன்னு கணக்கே இல்லாம சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு இந்த காரச் சட்னி ஓட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு தக்காளி வெங்காயத்தை அரைக்க தேவையில்லை தக்காளியே போட தேவையில்லை. வெங்காயமும் சேர்க்க தேவையில்லை இது பூண்டு காரச்சட்னி. பூண்டு கூட நீங்க உரிக்கணும் அப்படி என்ற அவசியம் கிடையாது பூண்ட அப்படியே சேர்த்து அது கூட புளி காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து அதுகூட சூடான எண்ணெய்யும் ஊத்தி நல்லா சுட சுட சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -

கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க மத்தபடி பெரியவங்க சாப்பிடும் போது இதே அளவுல செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு இந்த காரச்சட்னி ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான காரச் சட்னிக்கு இட்லி, தோசையெல்லாம் சூப்பரான காம்பினேஷனா இருக்கும் சப்பாத்திக்கும் கூட நீங்க இந்த கார சட்னி வச்சு சாப்பிடலாம் பூரிக்கும் சூப்பரா இருக்கும். வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்ஷா இந்த காரச் சட்னியை தொட்டுக்கிட்டு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும்.

ருசியான இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க நீங்க அவசரமா எங்கயாவது கிளம்புறீங்க அந்த டயத்துக்கு உங்களுக்கு டக்குனு ஏதாவது சட்னி சாப்பிடணும் அப்படின்னா இந்த சட்னியை யோசிக்காமல் செஞ்சிடுங்க டக்குனு பூண்டு எடுத்து போட்டு காய்ந்த மிளகாய் போட்டு புளி உப்பு, கருவேப்பிலை எல்லாமே சேர்த்து அரைச்சிடுங்க ஒரு சூப்பரான சட்னி சட்டுனு ரெடியாகிவிடும். ரெண்டு நிமிஷத்திலேயே இந்த சட்னியை அரைச்சு முடிச்சிடலாம் அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ருசியான டேஸ்டான பூண்டு கார சட்னி எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

பூண்டு கார சட்னி | Garlic Kara Chutney Recipe In Tamil

பொதுவா எல்லாருமே இட்லி தோசைக்கு ஒன்னு தக்காளி கார சட்னி பண்ணுவாங்க இல்ல தேங்காய் சட்னி செய்வாங்க. தேங்காய் சட்னி செய்வது என தான் ஈசியா இருந்தாலும் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி சாப்பிடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஆனா காரச்சட்னி சாப்பிட்டால் பெருசா எந்த பாதிப்பும் இருக்காது ஆனா காரச்சட்னி செய்வதற்கு தக்காளி வெங்காயத்தை வதக்கி அரைச்சு செய்யணும் அப்படின்னு கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கும் ஆனா இனிமேல் உங்களுக்கு காரச்சட்னி சாப்பிடனும் போல இருக்கு அது உன் ரொம்ப சீக்கிரத்திலேயே சாப்பிடணும் போல இருக்குன்னா வெங்காயம் பூண்டு எதுவுமே உரிக்காமல் டக்குனு இந்த சூப்பரான சட்னியை செஞ்சு சாப்பிடுங்க நல்லா சுடச்சுட ஆவி பறக்க இட்லி சுட்டு அதுக்கு இந்த சட்னி மட்டும் வச்சு சாப்பிட்டீங்கன்னா எத்தனை இட்லி சாப்பிடுறீங்கன்னு கணக்கே இல்லாம சாப்பிடுவீங்க.
Prep Time2 minutes
Active Time5 minutes
Total Time7 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Garlic Kara Chutney
Yield: 4 People
Calories: 45kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 8 வர மிளகாய்
  • 10 பூண்டு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு காய்ந்த மிளகாய் புளி, உப்பு கருவேப்பிலையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயை கடாயில் சேர்த்து காய்ச்சி அந்த சூடான எண்ணெயை சட்னியில் சேர்த்து விட்டால் சுவையான காரச் சட்னி தயார்.

Nutrition

Serving: 300 g | Calories: 45kcal | Carbohydrates: 2.4g | Protein: 6.4g | Fat: 1.3g | Sodium: 53mg | Potassium: 121mg | Vitamin A: 51IU | Vitamin C: 132mg | Calcium: 18mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி செய்யலாம் வாங்க!

-விளம்பரம்-