இஞ்சி கார சட்னி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

வீட்ல குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த இஞ்சி கார சட்னி செஞ்சு அசத்துங்க. இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்குமே வெச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். செரிமான பிரச்சனை இருக்கிறவங்க காய்ந்து மிளகாய் கொஞ்சம் குறைச்சுக்கிட்டு இந்த சட்னி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா செரிமான பிரச்சனை சரியாகும். இதுக்கு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க தேவை இல்லை. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இஞ்சி கார சட்னி செஞ்சுடலாம்.

-விளம்பரம்-

அவசரத்துக்கு ஏதாவது சட்னி செய்யணும் அப்படின்னா கண்டிப்பா இந்த சட்னி உங்களுக்கு கை கொடுக்கும். வீட்ல பழைய சாதம் இருந்துச்சுன்னா அதை காலி பண்றதுக்கு இந்த சூப்பரான இஞ்சி கார சட்னி செஞ்சிடலாம். பழைய சாதம் ஃபுல்லாவே காலி ஆகிடும். சுடு சாதத்திலையும் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம். சைடு டிஷ் கூட எதுவும் தேவைப்படாது. அவ்ளோ அருமையா இருக்கும். சுவையான சூப்பரான இந்த இஞ்சி கார சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -

தக்காளி சட்னி தேங்காய் சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை வெங்காயம், தக்காளி எதுவுமே இல்லாத இந்த இஞ்சி கார சட்னி பாருங்க. காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்கும். சளி இருமல் இருந்தா கூட இந்த சட்னியை சாப்பிட்டீங்கன்னா பறந்து போய்விடும். வெங்காயம் தக்காளி விலை அதிகமா இருக்குற சமயத்துல இந்த சட்னியை கண்டிப்பா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க சுவையான இந்த இஞ்சி கார சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

இஞ்சி கார சட்னி | Ginger Chutney Recipe In Tamil

வீட்ல குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட கொஞ்சம் சலிப்பா இருந்துச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த இஞ்சி கார சட்னி செஞ்சு அசத்துங்க. இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் எல்லாத்துக்குமே வெச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். செரிமான பிரச்சனை இருக்கிறவங்க காய்ந்து மிளகாய் கொஞ்சம் குறைச்சுக்கிட்டு இந்த சட்னி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா செரிமான பிரச்சனை சரியாகும். இதுக்கு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க தேவை இல்லை. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இஞ்சி கார சட்னி செஞ்சுடலாம். அவசரத்துக்கு ஏதாவது சட்னி செய்யணும் அப்படின்னா கண்டிப்பா இந்த சட்னி உங்களுக்கு கை கொடுக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney
Cuisine: Indian, TAMIL
Keyword: GINGER CHUTNEY
Yield: 4 People
Calories: 94kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 5 பல் பூண்டு
  • 25 கி இஞ்சி
  • 5 பல் பூண்டு

செய்முறை

  • ஒரு கடாயில் மல்லி விதைகள் உளுந்தம் பருப்பு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
  • புளியை ஊற வைத்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ளதில் சேர்த்து விட்டால் சுவையான இஞ்சி கார சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 94kcal | Carbohydrates: 2.4g | Protein: 17.2g | Fat: 2.5g | Sodium: 75mg | Potassium: 123mg | Fiber: 14.2g | Vitamin A: 25IU | Vitamin C: 65mg | Calcium: 12mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : பீர்க்கங்காய் தோல் சட்னி ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க!