- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வீட்ல மட்டன் வாங்குனா நம்ம மட்டன் மட்டும் வாங்க மாட்டோம் அது கூட சேர்த்து ஈரல், ரத்தம், நுரையீரல், சுவரொட்டி அப்படின்னு நிறைய வாங்குவோம். ஆட்டு உடலில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நம் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. ஹீமோகுளோபின் கம்மியா இருக்குறவங்க அதனால இரத்தசோகை பிரச்சனை இருக்கிறவங்க எல்லாரும் ஆட்டோவோட கறியை சாப்பிடுவதை விட அதனுடைய ஈரல் சுவரொட்டி ரத்தம் இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நிறைய நிறைய சத்துக்கள் கிடைக்கும். தலைக்கறி சாப்பிடறதுனால நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அந்த தலைக்கறியை எப்படி செஞ்சு சாப்பிடுவது என்று தெரியவில்லையா அப்போ இப்ப நான் சொல்ற செய்முறையில செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட்டால் இரண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த தலைக்கறி மசாலா. குழந்தைகளுக்கு இந்த தலைக்கறி மசாலாவை மட்டன் மசாலா அப்படின்னு சொல்லி கூட சாப்பிட கொடுக்கலாம். ஒரு தடவை சாப்டாங்கனா அப்புறம் அடிக்கடி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும் இந்த தலைக்கறி மசாலா. இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான தலை கறி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!
Ingredients
Method
ஒரு குக்கரில் தலைக்கறியை கழுவி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மூன்று சின்ன வெங்காயம் ஒரு டீஸ்பூன் சீரகம் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
வேகவைத்த தலைக்கறியிலிருந்து எலும்பை விட்டுவிட்டு கறியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கிராம்பு சீரகம் மிளகு ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கருவேப்பிலை போட்டு தாளித்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள் மட்டன் மசாலா உப்பு சேர்த்து கலந்ததும் கறியை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான தலைக்கறி மசாலா தயார்.






