- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
விநாயகர் குழந்தை வடிவமானவர். அவருக்கு விருப்பமான உணவுகளை படைத்து வழிபட்டாலே ஓடி வந்து அருள் செய்யக் கூடியவர். விநாயகருக்கு பலகாரங்கள் என்றால் அலாதி பிரியம். எனவே விநாயகர் சதுர்த்தியன்று வித விதமான பலகாரங்களை தயாரித்து விநாயகருக்கு படைப்போம். விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டை மட்டும் பிடித்தமான உணவு பொருள் இல்லை. விநாயகருக்கு பிடித்தமான உணவுகள் பல உண்டு. விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை மிகவும் விருப்பமான உணவுகளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கடலை மாவு லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் வீட்டில் செய்து சாப்பிடும் இனிப்புகள் என்றால் அது ஒரு தனி அனுபவம் தான். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கடலை மாவு லட்டு. இது சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. இந்த லட்டு வட இந்தியாவில் எல்லா பண்டிகையின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த சுவை மிகுந்த ருசியான லட்டு கடலை மாவை நெய்யில் வறுத்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து கலர்புல்லாக செய்யும் ரெசிபி ஆகும். இது பொதுவாக எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறி மகிழ்வர்.
நாக்கில் எச்சி ஊற வைக்கும் இந்த ஸ்வீட் எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே குறைந்த சமையல் நேரத்தில் செய்து அசத்திடலாம். எனவே இது உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக மென்மையாக இருப்பதோடு அதன் நெய் சொட்டும் நறுமணமும் மீண்டும் மீண்டும் கடித்து சுவைக்க தூண்டும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த லட்டை அட்டகாசமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பூரண கொழுக்கட்டை
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து உருகியதும் முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் கடலை மாவை சேர்த்து வறுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து மாவு திரண்டு வரும் வரை வதக்கவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி இதனுடன் பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிய நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவு நன்கு லட்டு பதத்திற்கு வந்ததும் கொஞ்சம் மாவு எடுத்து லட்டுவாக பிடித்து வைக்கவும். அவ்வளவுதான் சுவையான கடலை மாவு லட்டு தயார்.






