சிக்கன் 65 என்று சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவென்றால் சிக்கன் 65 சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் நன்றாக வெளியில் மொறுமொறுவென உள்ளுக்குள் சாப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சிக்கன் 65 ரெசிபியை சிக்கன் பிரியாணி மட்டன் குழம்பு ரசம் தயிர் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம் என அனைத்திற்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவதற்கு தரமான சுவையில் இருக்கும். அதை அனைவரும் விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.
ஆனால் எப்பொழுதுமே நம் வீட்டில் ஒரே மாதிரியாக சமைத்து கொடுத்தால் கொஞ்சம் சலித்து போய்விடும். எனவே இனி மேல் எப்பொழுதுமே ஒரே மாதிரியாக சிக்கன் 65 செய்யாமல் குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி சொன்ன சூப்பரான கிரீன் சிக்கன் 65 செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு தடவை மட்டும் இந்த கிரீன் சிக்கன் 65 உங்க வீட்டில் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்குப் பிறகு அடிக்கடி நீங்கள் இதனை செய்து ரசிப்பீர்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி கேட்டு அடம்பிடிப்பார்கள்.
இந்த கிரீன் சிக்கன் 65 செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. மசாலா பிரிந்து வராமல் ஒரு பெர்பெக்ட்டான சிக்கன் 65 நம்மால் செய்ய முடியும். மசாலாக்கள் சிக்கன் நன்றாக கலந்து சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். இதனுடைய வாசனை பக்கத்து தெரு வரைக்கும் செல்லும் அந்த அளவிற்கு மணமாகவும் ருசியாகவும் இருக்கும். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலும் இந்த சூப்பரான கிரீன் சிக்கன் 65 ரெசிபியை செய்து கொடுங்கள் நிச்சயமாக விரும்பி சாப்பிட்டுவிட்டு உங்களை பாராட்டாமல் போகவே மாட்டார்கள். இப்பொழுது இந்த சூப்பரான கிரீன் சிக்கன் 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கிரீன் சிக்கன் 65 | Green Chicken 65 Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி சிக்கன்
- 1/2 கப் தயிர்
- 1/2 கப் புதினா
- 1/2 கப் கொத்தமல்லி
- 2 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
- 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 துண்டு இஞ்சி
- 7 பல் பூண்டு
செய்முறை
- சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து சிக்கனில் சேர்த்து கொள்ளவும்.
- பிறகு அதனுடன் அரிசி மாவு,மைதா மாவு, சோள மாவு கரம் மசாலா, மல்லித்தூள் தயிர்,உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து ஊற வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான கிரீன் சிக்கன் 65 தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரேமாதிரியான சிக்கன் செய்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் இந்த முகலாய் சிக்கன் செய்து பாருங்கள்!!