- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான முகலாய் சிக்கன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் அசைவம் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும்.
அப்படி இந்த முகலாய ஸ்டைலில் செய்யும் சிக்கன் மசாலா எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய சிக்கன் ரெசிபிகள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கன் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த முகலாய சிக்கன் ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ஹைதராபாத் சிக்கன் மசாலா நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சிக்கன் சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். பின் பால், காஷ்மீர் மிளகாய்த்தூள், உப்பு, வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முகலாய் சிக்கன் தயார்.






