- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
கிரீன் சிக்கன் நிறைய பேரோட வீட்டுல ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க ஆனா புதினா மல்லி இலைகள் சேர்த்து செய்ற இந்த கிரீன் சிக்கன் வாசனையே அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த கிரீன் சிக்கனை நாம் புலாவுக்கு வச்சு சாப்பிடலாம் செம டேஸ்டா இருக்கும். புலாவுக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், ரசம் சாதம் எல்லாத்தோடும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அது மட்டும் இல்லாமல் சுடு சாதத்தில் போட்டு பெசஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் எதிர்பாக்காத அளவுக்கு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த கிரீன் சிக்கன உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் இந்த கிரீன் சிக்கன நீங்க அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் செமையா இருக்கும்.
முக்கியமா உங்க வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளுக்கு இந்த கிரீன் சிக்கன் செஞ்சு கொடுங்க புதினா இலைகள் மல்லி இலைகளை நிறைய நிறைய நன்மைகள் இருக்கு. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் கிரேவி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி சிக்கன் எடுத்து கிரீன் சிக்கன் செஞ்சு கொடுங்க. சாப்பிட்டு விட்டு கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க. இவ்ளோ டேஸ்டான இந்த கிரீன் சிக்கன இன்னைக்கே சிக்கன் எடுத்து வீட்ல செஞ்சு பாருங்க அவ்ளோ ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான கிரீன் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிள் சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அதனையும் சிக்கனுடன் சேர்த்து நன்றாக கிளறி சுருள சுருள வதக்கி சிக்கன் வெந்தவுடன் இறக்கினால் சுவையான கிரீன் சிக்கன் தயார்.






