நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு ராசி உச்சம் பெற்றால் அதனால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக குருபகவான் குழந்தை பாக்கியம் தொழில் செல்வம் மகிழ்ச்சி திருமணமாகாதவர்களுக்கு திருமணம் என பலவிதமான நன்மைகளை நடத்திக் கொடுப்பார். அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5:22 மணிக்கு குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழைவது அனைவரின் ஆசைகள் நிறைவேறும். இந்த மாற்றம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். குரு ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்

மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் பெரிய அளவில் நன்மை அடைவீர்கள். ஏனெனில் இந்த பெயர்ச்சி மேஷ ராசியின் இரண்டாவது வீட்டில் நடக்கப் போகிறார், இதனால் நீங்கள் எடுக்கும் அனைத்தும் முயற்சிகளிலும் வெற்றியை பெறுவீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும்.
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் லக்னத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை சந்தீப்பீர்கள். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். உங்கள் படைப்பாற்றலை மீட்டெடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமே நல்லது. எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களையும், பணப் பலன்களையும் தரும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எதிர்பாராத திடீர் நிதி ஆதாயத்தையும், பதவி உயர்வையும் மற்றும் சம்பள உயரத்தையும் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் சிறப்பாக நடைபெறும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.
விருச்சிகம்

குரு நட்சத்திர பெயர்ச்சி விருச்சிக ராசியின் ஏழாவது வீட்டில் நடக்க உள்ளது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வழிகளில் இருந்து பண ஆதயத்தை தரும். தொட்டவை துலங்கும். வாழ்வில் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம்.
மகரம்

குரு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மகர ராசிக்காரர்கள் குருவின் முழுமையான ஆசீர்வாதத்தை பெறுவார்கள். நல்ல அதிர்ஷ்டம், பண லாபம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும்.
இதனையும் படியுங்கள் : சனி வக்ர பெயர்ச்சி அடுத்த 139 நாட்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு ராஜராஜ வாழ்க்கை தான்!!


