நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு ராசி உச்சம் பெற்றால் அதனால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக குருபகவான் குழந்தை பாக்கியம் தொழில் செல்வம் மகிழ்ச்சி திருமணமாகாதவர்களுக்கு திருமணம் என பலவிதமான நன்மைகளை நடத்திக் கொடுப்பார். அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறது குரு. இதை தவிர, குரு அவ்வபோது வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி அடையும். குரு வக்ர பெயர்ச்சி அக்டோபர் 9, 2024 அன்று காலை 10:01 மணிக்கு ரிஷப ராசியில் நடக்கும், பின்னர் பிப்ரவரி 4, 2025 அன்று மதியம் 01:46 மணிக்கு 46 நிமிடங்கள் இதே நிலையில் நகரும். இது சில ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுனத்தின் பத்தாம் வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார், இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். இதுவரை தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருக்கான மருத்துவச் செலவுகள் குறையும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நீண்ட நாள்களாக இருந்துவந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
கடகம்

கடகத்தின் 11 வது வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையில் சாதகமான பலனைத் தரும். பணவரவில் இருந்த தடை நீங்கும். பொன் பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பாடாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். இதுவரை கண்டும் காணாமல் போனவர்கள் தேடிவந்து பேசுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சமய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
தனுசு

தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். இனி அதிக சம்பளத்துடன் பதவியுயரும்.
இதனையும் படியுங்கள் :குரு பெயர்ச்சியால், குபேர யோகம் 2025 க்குள் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்


