குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் சில ராசிகள்!

- Advertisement -

குருவின் வக்கிரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் ஏற்படும்.. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை பின்னோக்கி நகரக்கூடிய வக்கிரநிலையை குரு பகவான் அடையப் போகிறார் அதனால் ஒரு சில ராசிகாரர்கள் நன்மைகளை பெற போகிறார்கள். சிறந்த கல்வி அறிவு ஞானம் பொன் பொருள் அனைத்தையும் குரு பகவான் தரக்கூடியவர். இந்த வகையில் இந்த வக்ரப்பெயர்ச்சியால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் வெற்றியும் பெருக்கவும் சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மிதுன ராசி

மிதுன ராசிக்குரிய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போவதால் தேவையில்லாத சில செலவுகள் ஏற்படலாம். குருவின் வக்கிரப் பெயர்ச்சியால் சில சாதகமான சூழல்கள் ஏற்படும். இலக்குகளை அடைவதன் முயற்சியை அதிகமாக செலுத்தினால் வெற்றி கிடைக்கும். பிறரிடம் நீங்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காத வாய்ப்புள்ளது சொந்த பந்தங்களுடைய ஆதரவு கிடைக்கும் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை கிடைக்கும். வியாபாரத்தில் அதிகமாக கவனத்துடன் செயல்பட்டால் அதிக லாபம் கிடைக்கும்.

- Advertisement -

கடக ராசி

கடக ராசிக்கு குரு பகவானின் வக்கிர பெயர்ச்சி காரணமாக நிறைய அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. இந்த வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றமும் வியாபாரத்தில் புதிய திட்டங்களும் முயற்சியும் வெற்றியடையும்.

கன்னி ராசி

ரிஷப ராசியில் குரு பகவான் பின்னோக்கி நகர்வதால் கன்னி ராசிக்காரர்கள் அவர்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் மேலும் மற்றவர்களிடம் சிக்கிய பணம் திரும்ப கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. நிலுவையில் இருந்த பணிகள் முடிவடைந்து நல்ல பலன்களை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சமும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களுடைய பாடங்களை படிப்பதற்கு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சில விலை உயர்வான பொருட்கள் கிடைக்கும். தொழிலிலும் வேலை பார்க்கும் இடத்திலும் வெற்றிகள் கிடைக்கும் மேலதிகாரிகள் உடைய ஆதரவு கிடைத்து சம்பள உயர்வு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுடைய செயல்களில் புத்திசாலித்தனமும் சிந்தனையும் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நல்ல வருமானம் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

-விளம்பரம்-

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிலையால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பெரிய லாபகரமான சூழ்நிலை ஏற்பட்டு வாழ்க்கையில் புதிய முன்னேற்றமும் வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பு அதிகரித்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பெயர்ச்சியால் சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள் இவர்கள் தான்!!