நவகிரகத்தில் அழகு, செழிப்பு, ஆடம்பரம், இல்லற சுகத்தை தரக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவான் தனம், திருமண சுகத்தை தரக்கூடியவர். சுக்கிரன் பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய கிரகம். அதனால் அவர் நமக்கு நன்மையே செய்வாரே தவிர தீமையை செய்ய மாட்டார். நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். அதன்படி சுக்கிரன் அக்டோபர் மாதம் 13 ம் தேதியில் நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சுக்கிரன் தனது வழக்கமான இயக்கத்தின்போது, துலாம் ராசிக்கு மாற உள்ளார். மகிழ்ச்சி மற்றும் வளமையான வாழ்க்கைக்கு வழி செய்யும் சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு ஓஹோ என்று அமோகமான வாழ்வைக் கொடுப்பார். அந்த ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும். பிள்ளை செல்வம் வேண்டியவர்களுக்கு, அந்த வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நண்பர்களுடனான உறவு மேம்படும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
மீனம்

வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சுக்கிரனின் ஆசி அற்புதமான பலன்களைத் தரும், மீன ராசியினருக்கு தொழில் விருத்தி, பணியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திடீர் பணவரவு ஏற்படும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தொழில் தொடங்க நினைத்தால் அதிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி இருக்கும். சுக்கிர பகவானின் ஆசியைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்

சுக்கிரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிபொங்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் சாதகமாக மாறும். வசதிகள் பெருகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
கன்னி

விஜயதசமிக்கு பிறகு நடைபெறும் சுக்கிரனின் சஞ்சார மாற்றம் கன்னி ராசிக்கு அருமையானதாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் நெருக்கமாவார்கள். புதிய வேலைகளைச் செய்யலாம், இது உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். அவர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் நிம்மதி கிடைக்கும். வாழ்வின் முக்கியமான காலகட்டமாக இருக்கும் இந்த சமயம் பொருளாதாரத்தில் உங்களை தூக்கி நிறுத்திவிடும். செல்வம் குவியும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். சிக்கிய பணத்தையும் திரும்ப பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்வில் செழிப்பும் சந்தோஷமும் இருக்கும். வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உதவியால் பண ஆதாயம் உண்டாகும்.
மேஷம்

மேஷ ராசியினரின் கவலைகள் எல்லாம் தூரப்போகும் நேரம் இது. மனதில் மகிழ்ச்சி பொங்கும். வராக்கடன் எல்லாம் வந்து சேரும். சுக்கிரனின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வருமானம் பெருகும். தொழில் வாழ்க்கையிலும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் அதில் வெற்றி பெறலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம்.
இதனையும் படியுங்கள் : புரட்டாசியில் அதிர்ஷ்டம் அடிக்க போகும் நான்கு ராசிகள்!!


