அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் குரு பகவான் அவருடைய வக்ரப் பெயர்ச்சியை ரிஷப ராசியில் தொடங்கப் போகிறார். வாழ்க்கையில் சில மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நடக்கும் எனவே அனைத்து ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
மேஷ ராசி

மேஷ ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதால் வேலை மற்றும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சமுதாயத்தில் பதவி மரியாதை அனைத்தும் அதிகரிக்கும். குரு பகவானின் அமைப்பால் வசதி வாய்ப்புகள் தேடி வரும் மேலும் சொத்து வாங்க இந்த காலம் சிறப்பான காலம்
ரிஷப ராசி

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியில் நடப்பதால் பலவிதமான சாதகமான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும் மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் பல வெற்றிகள் கிடைக்கும் தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும்
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு 12 ஆம் வீட்டில் குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி காரணமாக வீட்டில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வருமானம் உயரும். குருவின் அருளால் குடும்பத்தின் மகிழ்ச்சி பொங்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல சில பலன்களைக் கொடுக்கும் வெளியூர் வெளிநாடு செல்ல அதிகமான வாய்ப்புள்ளது. மேலும் குடும்பத்தில் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க உங்களுக்கு தைரியம் வரும்
கடக ராசி

கடக ராசிக்கு 11 ஆம் வீட்டில் குரு பகவானின் வக்கிர பெயர்ச்சி நடப்பதால் அதிர்ஷ்டம் கைக்கூடி வரும். உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் விலகும் அனைத்து காரிய தடைகளும் விலகி அனைத்திலும் வெற்றியே கிடைக்கும் தொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும்.
சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி சில அதிர்ஷ்டமான விஷயங்களை கொடுக்கும். நிதிநிலை மேம்படும் மேலும் சேமிப்பு அதிகமாகும் உங்களுடைய பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைத்து விருப்பங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு 9ஆம் வீட்டில் குருபகவானின் வக்கிரப் பெயர்ச்சி நடப்பதால் வீட்டில் அதிகமான நன்மைகள் நடக்கும். குரு பகவானின் அமைப்பால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சீக்கிரத்தில் சரியாகும் மனக்கவலைகள் இருந்தாலும் உங்களுடைய பேச்சில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக கவனமாக இருந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் சரியாகும்
துலாம் ராசி

துலாம் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் முன்னோர்களின் சில சொத்துக்கள் கிடைக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் சமபங்கில் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் புத்திசாலித்தனமாக செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியில் முடிவடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் முடியும்
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் குரு பகவானின் வக்ர நிலை இருப்பதால் பெரிய பண பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. அது உங்களுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கும். முதலீடுகள் போடுவதில் சற்று கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் அழுத்தம் ஏற்படலாம் எனவே அங்கும் கவனம் தேவை.
தனுசு ராசி

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு குருவின் வக்ர நிலை ஆறாம் வீட்டில் இருப்பதால் சில இழப்புகள் ஏற்படலாம் எனவே அனைத்தையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளி பார்க்கும் இடத்தில் பொறுப்பை உணர்ந்து நன்றாக செயல்பட வேண்டும் ஏனென்றால் உடன்படி பார்ப்பவர்களுடன் சில சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் அதனால் அவர்களுடைய ஆதரவு குறைந்து போகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும்
மகர ராசி

மகர ராசிக்கு குருவின் இந்த வக்ர பெயர்ச்சி நிறைய நன்மைகளை கொடுக்கும் குடும்ப தேவிக்கான செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் வீட்டில் நிறைய சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காதலில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் யோசித்து பேச வேண்டும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளுடன் உறவு அதிகரிக்கும்
கும்ப ராசி

கும்ப ராசிக்கு குருவின் வக்ர நிலை சுகஸ்தானத்தில் அமைவதால் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் இடமாற்றம் ஏற்படலாம் தொழிலில் லாபத்தை சந்திக்க கடினமாக உழைக்க வேண்டும் மேலும் குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் மன அழுத்தம் ஏற்படலாம்
மீன ராசி

மீன ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சி நடப்பதால் குடும்பத்தில் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும் சின்ன வேலையை முடிப்பதற்கு கூட நிறைய அலைச்சல்கள் ஏற்படலாம் எனவே மற்றவர்களிடம் கொஞ்சம் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். பிறரிடம் பணம் சிக்கி இருந்தால் அது திரும்ப கிடைக்க உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆன்மீக செயலில் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள் எனவே அதற்கான செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க தான் செய்யும். முடிவுகளை எடுப்பதில் குழப்பமான நிலை இருந்தாலும் கவனமாக செயல்பட வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டு வரை செல்வங்களை குவிக்கப்போவது இந்த மூன்று ராசிகள் தான்!