குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிக்காரர்கள்!

- Advertisement -

பொதுவாக ஒரு கிரகத்தின் இடம் பெயர்ச்சியால் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிப்ரவரி நான்காம் தேதி வரையில் குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி நகர தொடங்கப் போகிறார். எனவே இதனால் ஒரு சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். என்னதான் மனிதனுக்கு பல நல்ல காரியங்களை வாரி வழங்கக் கூடியவராக குருபகவான் இருந்தாலும் இந்த வக்க பயிற்சிகள் மூலமாக சில அசுப காரியங்களும் நடக்கும். அந்த வகையில் ஒரு சிலர் ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்தோடு தான் இருக்க வேண்டும். அந்த வகையில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷ ராசி

குரு பகவானின் இந்த வக்கிர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் திட்டம் தீட்டி வைத்திருந்த சில காரியங்கள் உங்களுக்கு நடக்காமல் தடைகள் ஏற்படலாம். புதியதாக ஏதாவது ஒன்றில் முதலீடுகள் செய்யும்போது அதில் தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அது நிறைய கவனம் தேவை. நிதி தொடர்பான விஷயங்களில் ஒரு சிலரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது. புதிய வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தினால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

- Advertisement -

ரிஷப ராசி

குரு பகவான் இந்த ரிஷப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடையப் போவதால் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தவறான புரிதல்களால் குடும்பத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் தேவை இல்லாத பிரச்சினைகள் ஏற்படும். வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கடந்த கால தவறுகளில் இருந்து கற்ற பாடத்தை உணர்ந்து செயல்பட்டால் உங்களுக்கு மிகவும் நல்லது.

சிம்ம ராசி

தற்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பான பார்வை அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் பெரிய மாற்றத்தையும் சவால்களையும் சந்திக்க நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் கூட கவனமாக அந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் புத்திசாலித்தனத்தோடும் கடின உழைப்போடும் இருந்தால் வேலையில் முன்னேறலாம்.

துலாம் ராசி

குருவின் வக்கிர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பாக சில பிரச்சினைகள் ஏற்படும். எனவே பணம் தொடர்பான விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் மிகவும் நல்லது. குருவின் வக்கிரப் பெயர்ச்சியால் தேவையற்ற மன அழுத்தமும் மன சஞ்சலமும் ஏற்படும். தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் மன அமைதி பெற முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுடைய கோபத்தை குறைக்கும்.

-விளம்பரம்-

தனுசு ராசி

தனுசு ராசி அதிபதியான குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் கவனம் அதிகமாக தேவை. பண வருவாய் அதிகமாக இருந்தாலும் அதனை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள் செலவுகள் அதிகமாக வரும் ஆனால் உங்களுடைய முயற்சிகளின் மூலமும் கடும் உழைப்பின் மூலமும் அதனை தடுத்து வேலையில் கவனம் செலுத்துங்கள். சரியான நேரத்தில் சில முயற்சிகளை முடிக்க உழைப்பை போட வேண்டும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகம் தேவை.

மகர ராசி

குருவின் வக்கிர பெயர்ச்சி உங்களுடைய குடும்பத்தில் படம் தொடர்பான விஷயத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த பிரச்சினை மனக்கவலையை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய பேச்சு செயலில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணம் தொடர்பாக நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அதன் கூடுதல் கவனமும் சிந்தனையும் அவசியம். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எடுக்கப் போகும் புதிய முயற்சிகளில் சில தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய எண்ணங்களை நேர்மறையாகவும் நல்ல எண்ணங்களுடனும் வைத்துக் கொள்வது நல்லது.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பெயர்ச்சியால் சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள் இவர்கள் தான்!!

-விளம்பரம்-