குருவின் பார்வையால் கல்லாப்பெட்டி நிறைய போகும் யோககார ராசிகாரர்கள் இவர்கள் தான்!

- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள் குருவின் பார்வைக்கு அப்படி ஒரு பலன் இருந்தால் குரு இருக்கும் அந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும். குரு யாருடன் சேர்ந்து இருக்கிறார் என்பதை பொறுத்து அவருடைய பலன்களில் மாறுபாடுகள் ஏற்படும். குருவின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு முறையும் நடைபெறும் பொழுதும் அவரின் பார்வை படும் இடங்களில் உள்ள ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும். ஒன்பதில் குரு இருந்தால் கோடீஸ்வர யோகம் உண்டு என்று கூறுவார்கள். தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆகிய இவர் மக்களுக்கு ஞானத்தை வழங்கி அவர்கள் நல்வழியில் செல்வதற்கு அருள் புரிகிறார். மங்கள கிரகமாகிய குரு பகவான் இடமாற்றம் அனைவருக்கும் நன்மை பயக்கும். 2024 இல் ரிஷப ராசிக்கு குரு இடப்பெயர்ச்சி ஆகிறார். அவர் இடம்பெயர்ச்சி ஆகும் பொழுது அவர் பார்க்கும் ராசிகள் மற்றும் இருக்கும் இடமான ரிஷபத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகுது என்பதை பார்க்கலாம். அப்படி குருவின் பெயர்ச்சியால் பண மழையில் நனைய போகும் ராசிகளின் எவை என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

குரு ஸ்தலமான திட்டையில் சென்று குருவை தரிசனம் செய்து அவருடைய பார்வையில் கிடைக்கும் நன்மைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜாதகக்காரருக்கு குருவின் ஆதிக்கம் கிடைத்துவிட்டால் அதற்கு பதவி, பட்டம், பெயர், புகழ் அனைத்தும் தானாக தேடிவரும். குருபகவானின் அருள் கிடைத்தால் நீதித்துறை , வங்கி நிதி அமைச்சர் போன்ற நிதி சம்பந்தப்பட்ட இடங்களில் ஆளுமையில் இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் குருவின் திசை நடந்தால் அவர்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவார். அவர்களுக்கு நன்மை தீமை அனைத்தையும் செய்வார். தனம் மற்றும் குழந்தைவரமே வாழ்வதற்கு ஆதாரம் அதை குருவே கொடுக்க வல்லவர். ஆகையால் குழந்தையின்றி தவிப்பவர் அனைவரும் குருவை வழிபட்டு குழந்தை மற்றும் தனம் பெற்று மகிழ்வோடு வாழலாம். இப்பொழுது குருவின் பெயர்ச்சியால் எந்த ராசிகள் அனுகூல பலன்களை பெற போகிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

மேஷம்

குருவின் பார்வையினால் உங்களுக்கு அதிர்ஷ்ட வர போகிறது. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

ரிஷபம்

குரு இடமாற்றம் செய்வதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவிற்கு எந்த ஒரு குறையும் இருக்காது.வேலைவாய்ப்பில் புதிய முயற்சிகள் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடல் நிலையிலீ ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த ஒரு குறைவும் இருக்காது.

கடகம்

கடக ராசிக்காரர்களே இந்த குருவின் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. வேலை வாய்ப்புகளில் நல்ல மாற்றம் ஏற்படும். தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைவேறாமல் இருந்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணத்தில் ஏற்பட்ட முயற்சி நல்ல பலன்களை கொடுக்கும். புதிய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். உடலில் ஆரோக்கியம் மேம்படும் . தடைபட்ட அனைத்து காரியங்களும் நடக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இந்த குரு பகவானின் பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் பலமுறை கிடைத்து இருக்கிறது. மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் . பணவரவுஅதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறும். மற்றவர்களால் உங்களுக்கு அதிக நன்மை உண்டாகும். வேலை வாய்ப்பு தொழில்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.