- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
மீன் வைத்து மீன் குழம்பு, மீன் வருவல், மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இன்னைக்கு மீன் வைத்து ஒரு சூப்பரான ஹனி சில்லி மீன் செய்யப் போறோம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்.ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. ரெஸ்டாரண்ட்ல கிடைக்கக்கூடிய இந்த ரெசிபியை வீட்ல எல்லாருக்கும் செஞ்சு கொடுத்தா சர்ப்ரைஸ் ஆக இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்ல செஞ்சு கொடுத்தே ஆகணும். மீன் பிரியர்களுக்கு இது ஒரு சூப்பரான ரெசிபி.
மீன் வாங்கினால் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல் இந்த மாதிரி செஞ்சு அசத்தி பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே ஒரே குஷி ஆயிடுவாங்க. அதுவும் ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் சாப்பிடுவதற்கு ஆசையா இருக்கும் ஆனா கடையில போய் சாப்பிடுவதற்கு யோசிப்பாங்க அந்த மாதிரி யோசிக்கிறவங்க வீட்டிலேயே இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற அதே டேஸ்ட் வீட்டிலேயே கிடைக்கும்.
இந்த ரெசிபி செய்றதுக்கு அதிகமா முள் இல்லாத மீன் தான் எடுக்கணும். நிறைய முள் இருக்கிற மீன் எடுத்தா இந்த ரெசிபி செய்றதுக்கு அவ்ளோ நல்லா இருக்காது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்கு நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே சாப்பிடணும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அதிகமாவே சாப்பிடுவாங்க அதனால நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க இப்ப வாங்க இந்த ருசியான ஹனி சில்லி ஃபிஷ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முள் இல்லாத மீனை சிறிதாக வெட்டி கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் சோள மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மீன் நன்றாக ஊறியதும் மீனை கலந்து வைத்துள்ள மாவில் நன்றாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் அதே எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு சோயா சாஸ் ரெட் சில்லி சாஸ் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அரை டேபிள்ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கலந்து அதனையும் சேர்க்கவும்.
பிறகு பொறித்து வைத்துள்ள மீனை சேர்த்து தேன் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ஹனி சில்லி மீன் தயார்.






