Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mullangi Ice Cream
ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய் Photo: Recipes
முகப்பு/ஐஸ்2023.10.20பதிப்பு · TA
ஐஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்

PK
எழுதியவர்Prem Kumar20 அக்டோபர், 2023 அன்று 01:05 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
25 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
sweets

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் ஐஸ் கிரீம்கள் ஃப்ரோஷன் டெஸட், அதாவது உறைய வைக்கப்பட்ட இனிப்பு மட்டுமே. அதில் பால் அல்லது சத்துமிக்க எந்தவகையான உணவுப் பொருளும் இல்லை. எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.

தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் முள்ளங்கியை தோல் சீவி, நறுக்கி பின் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த முள்ளங்கி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். முள்ளங்கியின் பச்சை வாசனை போனதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற‌விடவும்.

  4. 4

    பின்னர் ஒரு பவுளில் ஃப்ரெஷ் கீரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். நல்ல கீரிமீயான பதம் வரும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.

  5. 5

    பின்னர் அதில் அரைத்த முள்ளங்கியை சேர்த்து மற்றொரு முறை நன்கு பீட் செய்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்துள்ள கீரீமை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஒரு பேப்பரால் மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைத்து விடுங்கள்.

  7. 7

    பின்னர் அதனை வெளியே எடுத்து பரிமாறவும் போது நறுக்கிய பாதாம், முந்திரி, குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும்.

  8. 8

    அவ்வளவுதான் சுவையான சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம் தயார்‌.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 68 கலோரி
  • கொழுப்பு · 0.1g
  • புரதம் · 0.64g
  • கார்போஹைட்ரேட் · 3.9g
தலைப்புகள்
#கிவி ஐஸ்கிரீம்#சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம்#தேன் ஐஸ்கிரீம்#பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement