- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இட்லி முட்டை கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி தான். இந்த ரெசிபியை வீட்ல ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. பொதுவா எல்லார் வீட்டிலேயும் இட்லி தோசைக்கு மாவு இருக்கும் அந்த மாதிரி இல்லாத சமயத்துல கடையில வாங்கி சாப்பிட உங்களுக்கு போர் அடிச்சதுனா அந்த சமயத்துல இந்த மாதிரி ஒரு முட்டை இட்லி செஞ்சு பாருங்க. இது கூட நம்ம பன்னீர் சேர்த்து செய்யப் போறதால ரொம்ப ரொம்ப அட்டகாசமான புரதச்சத்து நிறைந்த ஒரு உணவாக இருக்கும். இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை செய்வீங்க. இதுக்கு சைடிஸ் கூட எதுவுமே தேவைப்படாது.
குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா விரும்பி குழந்தைகளுக்கு காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஆரோக்கியமான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும் ரொம்ப ரொம்ப சாப்டா சாப்பிடுவதற்கு டிஃபரண்டான ரெசிபியாக இருக்கும். எப்பவுமே குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ரெசிபி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான இட்லி முட்டை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு முட்டை சாதம்
Ingredients
Method
ஒரு கடாயில் முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை துருவிய பன்னீர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இட்லி தட்டில் வெண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள முட்டையை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான இட்லி முட்டை மாவே இல்லாமல் தயார்.






