2024 ஆடி மாதம் எப்போது? ஆடியில் தவற விடக் கூடாத நாட்கள் எவை தெரியுமா?

- Advertisement -

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள். ஆடி மாதம், மழைக்காலத்தின் துவக்க மாதமாகும். அம்பிகை கருணையே வடிவானவள் என்பதால் தடையின்றி மழை பெறவும், நிலம், விவசாயம் செழிக்கவும் அம்பிகையிடம் வேண்டும் மாதம் என்பதால் இது அம்பிகை வழிபாட்டிற்கு உரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கும், சக்திக்கும் உரிய ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் திருவிழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடியில் விரதம் இருந்தால் வாழ்க்கை செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

-விளம்பரம்-

ஆடி மாதத்தின் சிறப்புகள்

ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி புதன்கிழமை அன்று பிறக்கிறது. இது ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை இருக்கும். ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். அதாவது சூரியன் தெற்கு பக்கமாக வலம் வரும். ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல் வடமாவட்டங்களில் முக்கியமான நிகழ்வாக இருக்கிறது.

- Advertisement -

கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான். ஆடியில் விதைத்தால் பருவமழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீரால் பயிர்கள் செழித்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும். அதன் காரணமாகவே, ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொல்லாடல் நமது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை

ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய புண்ணிய காரியம் புனித நீராடுவது. ஆடி மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவது மிக சிறப்பானது ஆகும். ஆடி மாதத்தில் கண்டிப்பாக புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராட வேண்டும். ஆடி மாதம் பெண் தெய்வமான அம்பிகைக்கு உரியது. ஆகையால் ஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தால் மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் ஏந்தி வருதல், தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகளை செய்யலாம்.

ஆடி மாதத்தில் செய்ய கூடாதவை

ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், பெண் பார்க்க செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக ஆவணி மாதத்தில் வைக்கலாம். ஆடி மாதத்தின் தொடக்கத்தில் மொட்டை அடிக்க கூடாது. ஆடி மாதத்தில் அதிக காற்று வீசும், பலத்த மழை பெய்யும் அதனால் கிரக பிரவேசம் செய்ய கூடாது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் இறை வழிபாடு செய்யும் போது கவனம் சிதறாமல் இருப்பதற்காக தான் திருமணம், கிரஹபிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

-விளம்பரம்-

ஆடி மாதத்தின் முக்கிய நாட்கள்

ஆடி 05 ஞாயிற்றுக்கிழமை – ஆடித்தபசு, ஆடி பெளர்ணமி

ஆடி 13 திங்கட்கிழமை – ஆடிக்கிருத்திகை

ஆடி 18 சனிக்கிழமை – ஆடிப்பெருக்கு

-விளம்பரம்-

ஆடி 19 ஞாயிற்றுக்கிழமை – ஆடி அமாவாசை

ஆடி 22 புதன்கிழமை – ஆடிப்பூரம்

ஆடி 23 வியாழக்கிழமை – நாக சதுர்த்தி

ஆடி 24 வெள்ளிக்கிழமை – கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஆடி 31 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்

குறிப்பிட்ட இந்த நாட்களிலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய கிழமைகளும் மட்டும் விரதம் இருந்து, அம்மனை வழிபட்டாலே அம்மனின் அருளும், முன்னோர்களின் அருளும் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சீக்கிரம் சொந்த வீடு வாங்க நாளை ஆடி கிருத்திகையில் 6 விளக்கு இப்படி மட்டும் ஏற்றுங்கள் போதும்!