இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளின் படி எந்த ஒரு சுப காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நல்ல நாள், நேரம் பார்த்து தான் துவங்குவது வழக்கம். நல்ல நாளில் துவங்கப்படும் காரியங்கள் சுபமாகவும், மங்கலகரமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. ஆகஸ்ட் மாதம் கிரிகோரியன் நாட்காட்டியின் எட்டாவது மாதமாகும், மேலும் இது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. ரோமானியப் பேரரசர் அகஸ்டஸின் பிறப்பைக் குறிக்கும் வகையில் அவரது பெயரிடப்பட்டது, ஆகஸ்ட் மாதத்தில் பல குறிப்பிடத்தக்க தேசிய மற்றும் சர்வதேச நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.
இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் உலகளவில், சர்வதேச இளைஞர் தினம் போன்ற நிகழ்வுகள் அதிகாரம் மற்றும் வளர்ச்சியை வலியுறுத்துகின்றன. இந்தியாவிலும் உலகிலும் ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கியமான நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. 31 நாட்கள் கொண்ட இந்த மாதத்தில், பல விதமான சுபகாரியங்கள் நடைபெறும். 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுப காரியம் நடத்த திட்டமிட்டிருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் இந்த மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தின் விரத நாட்கள்
ஆகஸ்ட் 04 – அமாவாசை
ஆகஸ்ட் 19 – பெளர்ணமி
ஆகஸ்ட் 26, ஆகஸ்ட் 04, – கிருத்திகை
ஆகஸ்ட் 18 – திருவோணம்
ஆகஸ்ட் 16 , ஆகஸ்ட் 29 – ஏகாதசி
ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 25 – சஷ்டி
ஆகஸ்ட் 22 – சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 02 – சிவராத்திரி
ஆகஸ்ட் 01, ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 31 – பிரதோஷம்
ஆகஸ்ட் 08 – சதுர்த்தி
ஆகஸ்ட் மாதத்தின் முக்கிய விசேஷ நாட்கள்
ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 04 – ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 07 – ஆடிப்பூரம்
ஆகஸ்ட் 08 – நாக சதுர்த்தி
ஆகஸ்ட் 09 – நாக பஞ்சமி, கருட பஞ்சமி
ஆகஸ்ட் 16 – வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 19 – ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 20 – காயத்ரி ஜெபம்
ஆகஸ்ட் 22 – மஹா மங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 26 – கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 27 – பாஞ்சராத்திர ஜெயந்தி
ஆகஸ்ட் மாதத்தின் சுபமுகூர்த்த நாட்கள்
ஆகஸ்ட் 22 – தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 23 – தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 30 – தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் மாதத்தின் கரி நாட்கள்
ஆகஸ்ட் 12 – அஷ்டமி
ஆகஸ்ட் 13 – நவமி
ஆகஸ்ட் 05, ஆகஸ்ட்18, ஆகஸ்ட் 25 – கரி நாட்கள்
இதனையும் படியுங்கள் : கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்