- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இட்லி தோசைக்கு மாவு ஆட்டி வச்சிடுவாங்க ஒரு வாரத்துக்கு பெரும்பாலும் நம்ம வீட்ல தோசை இட்லியாக மட்டும் தான் இருக்கும். அந்த வகையில ஒருவேளை வீட்ல இட்லிக்கு தோசைக்கு மாவு இல்ல அப்படின்னா கடையில போய் வாங்கிட்டு வந்து செய்யணும் அப்படின்ற அவசியமே கிடையாது. வீட்ல கோதுமை ரவை இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் மொறுமொறு தோசை செஞ்சு சாப்பிடுங்க. அரை மணி நேரம் கோதுமை ரவையையும் சிவப்பு அவலையும் ஊறவைத்து மாவ அரைச்சு இந்த சூப்பரான மொறு மொறு தோசை ட்ரை பண்ணி பார்க்கலாம்.
தேங்காய் சட்னி கார சட்னி, சாம்பார் குருமா சால்னா அப்படின்னு எல்லாமே இந்த தோசைக்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா வீட்ல இருக்குற எல்லாருமே அடிக்கடி இதனை செய்ய சொல்லி கேட்பாங்க. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். நல்லா சிவப்பு கலர்ல பாக்குறதுக்கு கலர் ஃபுல்லா சாப்பிடணும் போல தோணும். இந்த சூப்பரான தோசை ரெசிப்பிக்கு ஒரு சிலர் பத்து தோசை கூட சாப்பிடுவாங்க. நல்ல காரசாரமான சட்னி இருந்துச்சுன்னா இந்த தோசை சாப்பிடுவதற்கு அட்டகாசமாக இருக்கும்.
இந்த சுவையான தோசை ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வீட்ல மாவு இல்லாத சமயத்துல சப்பாத்தி பூரி அப்படின்னு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி இன்ஸ்டன்ட்டா ஒரு தடவ தோசை செஞ்சு பாருங்க. கொஞ்சமா சோடா உப்பு சேர்த்து செஞ்சுக்கோங்க கண்டிப்பாக ரொம்ப டேஸ்டா இருக்கும். கோதுமை ரவை சேர்த்து செய்வதால் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. வீட்ல மாவு இல்லாத சமயத்துலையும் இந்த மாதிரி அடிக்கடி கோதுமை ரவை வச்சு ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்டீங்கனா ஆரோக்கியமானதாக இருக்கும். இப்ப வாங்க இந்த இன்ஸ்டன்ட் கோதுமை ரவை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா உள்ளி காரம் தோசை
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, அவல், இஞ்சி காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தயிர் ஊற்றி கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
சோடா உப்பு சேர்த்து கலந்து தோசை சட்டியில் தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி மொறு மொறுவென சுட்டு எடுக்கலாம்.






