மேஷம்

இந்த வாரம் மேஷ ராசியினருக்குப் புதிய விடியலைத் தரும் வாரமாக அமைகிறது. லக்னாதிபதி வலுப்பெறுவதால் எதிலும் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள்.சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை இருப்பினும் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிட்டும். அரசாங்க அலுவல்கள் சிறப்பாகவே நடைபெறும். வேலை உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த மாற்றங்கள் உத்தியோகத்தில் உண்டு. அவ்வப்பொழுது காரியத் தடைகள் உண்டு. எந்தப் பிரச்னையையும் ஜாக்கிரதையாக அணுக வேண்டும். சிலருக்கு தேவையில்லாத மனக் குழப்பங்களும், தவறான புரிதல்களும் இருக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் கலை மற்றும் ஆபரணத் துறையில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும் வாரமிது. மனதில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஆதரவு தொழிலுக்குப் பக்கபலமாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பொறாமையைத் தவிர்க்கப் பொறுமை காப்பது நலம். தொழில் ரீதியாக நண்பர்களின் உதவி உண்டு. வெளிநாட்டு வேலை முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பேசுகின்ற பேச்சில் கவனம் தேவை. குடும்ப உறவில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளைத் தர வேண்டாம்.
மிதுனம்

இந்த வாரம் உங்கள் பேச்சாற்றல் மற்றும் புத்திக்கூர்மையால் கடினமான காரியங்களையும் எளிதில் சாதிப்பீர்கள். உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப விசேஷங்கள் மீண்டும் களைகட்டும். பொருளாதார நிலை ஏறுமுகத்தில் இருக்கும். எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். சின்ன தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறும் சிந்தனை உருவாகும். கடன்களின் ஒரு பகுதி அடையும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். தெய்வ தரிசனமும் பெரியோர்கள் ஆசிகளும் உண்டு. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்க விரோதம் வேண்டாம். கையெழுத்து போடுவதில் கவனம் தேவை.
கடகம்

இந்த வாரம் உங்களுக்கு மனத்தெளிவையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் வாரமாக அமைகிறது. வீண் மனக்கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். தெய்வ தரிசனம் உண்டு. சிலர் யாத்திரை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைத்துவிடும். குடும்ப உறவுகளில், சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.
சிம்மம்

இந்த வாரம் ஆளுமைத் திறனும் அதிகாரமும் ஓங்கும் வாரமாக இது திகழ்கிறது. அரசு வழிச் சலுகைகள் மற்றும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரிய வெற்றி உண்டு. குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதனைத் திறம்பட நிர்வகிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். வணிகம் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். நல்ல சிந்தனையோடு துரிதமாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் அமைப்பு. பிள்ளைகள் குறித்த கவலை மனதை பாதிக்கும். இல்லறத்தில் சிறுசிறு பிரச்னைகளும் வாக்குவாதங்களும் வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி

எதையும் திட்டமிட்டுச் செய்யும் உங்கள் குணம் இந்த வாரம் பெரும் வெற்றியை ஈட்டித் தரும். பொறுமைக்கேற்ற பலன்களை பெரும் வாரமாக இது அமைகிறது. கவலைகள் விலகும். புதிய உறவுகள் மூலம் நன்மைகள் நடக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் விரைந்து முடியும். உங்களுடைய எதிர்கால திட்டங்களுக்கான வெளிச்சம் கிடைக்கும். புதிய நண்பர்கள் தானாக வந்து உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். சிலருக்கு பூர்விகத்தில் சொத்து வீடு போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். குலதெய்வ வழிபாட்டில் தடை ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசியினருக்கு இது சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கும் வாரமாகும். இல்லத்தரசிகளின் மனம் மகிழும் விதமாக சம்பவங்கள் நடக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அலைச்சல்கள் குறையும். குடும்ப உறவு களில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும். தந்தையோடு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இருவருடைய சிந்தனைகளும் ஒத்துப் போகாது. எனவே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் மனக்கலக்கம் உண்டு. சிறிய உடல் உபாதைகள் உருவாகலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு தடைகளைத் தகர்த்து முன்னேறும் வாரமாக இது அமைகிறது. எதிலும் பின்வாங்காமல் போராடி வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் உறவுகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வணிகத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். எதிர் பாராத செலவுகள் ஏற்படும். செலவுகளில் கவனம் தேவை. வீடு மனை வாங்கும் போது கவனமாக இருங்கள். வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பேச்சில் கவனமாக இருக்கவும்.
தனுசு

தனுசு ராசியினருக்கு இது ஆன்மீகப் பலமும் அறிவுத் திறனும் கூடும் வாரமாகும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல் வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தெளிவான முடிவுகளை கையாண்டு வெற்றிகரமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டு. வாழ்க்கையில் சந்தோஷம் உண்டு. கருத்து வேறுபாடுகள் குறையும். தகுந்த ஆலோசனை கேட்டு, தீர்வுகளைக் காணும் முயற்சியில் இறங்குங்கள். பிறருக்கு வாக்குறுதி தருவதில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
மகரம்

இந்த வாரம் விடாமுயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் வாரமிது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிதானமான பலனைத் தரும். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். உத்தியோகத்தில் கடும் உழைப்பிற்குப் பின்பே அங்கீகாரம் கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய உத்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகும். தெய்வ பலமும் பெரியோர்கள் ஆசீர்வாதமும் உங்களை வழிநடத்தும். எந்த விஷயத்தையும் உள்ளுக்குள் போட்டு முழுங்க வேண்டாம்.
கும்பம்

சமூக மாற்றங்களிலும் புதிய முயற்சிகளிலும் ஆர்வம் காட்டும் கும்ப ராசியினருக்கு இது லாபகரமான வாரம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பு உங்கள் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும். புது காரியங்களில் முன்னாள் நின்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொட்டது துலங்கும் அமைப்பு. இதுவரை இருந்த குடும்ப சிக்கல்கள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். வணிகத்தில் லாப விருத்தி உண்டு. சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் அமைப்பும் உண்டு. கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்னைகள் வரும்.
மீனம்

மீன ராசியினருக்கு இது மனநிறைவும் ஐஸ்வர்யமும் தரும் வாரமாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் குடிகொள்ளும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளில் உள்ள குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். புதிய முதலீடுகளால் நல்ல விஷயங்கள் நடைபெறும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். அவசரமான முடிவுகளை எடுக்காதீர்கள். சோம்பலைத் துரத்துங்கள். நண்பர்களோடு கருத்து வேறு பாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பிறர் விஷயத்தில் தலை கொடுக்க வேண்டாம்.
இதனையும் படியுங்கள் : 2026ம் ஆண்டு மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் இனி இந்த மூன்று ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!


