வாராந்திர ராசி பலன் 3 June 2024 முதல் 9 June 2024 வரை

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை ஏதேனும் நிதி சிக்கலை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், இந்த வாரம் அதிலிருந்து விடுபடுவீர்கள். இந்த வாரம் குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறலாம். பணியிடத்தில் மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி மிகவும் தாமதமாகவே கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகி உங்களை திக்கு முக்காட வைக்கும். உறவினர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இந்த வாரம் வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு கொடிகட்டி பறக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி பெயர்வீர்கள்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளால் வேதனை படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் செலவுகள் சற்று அதிகமாக ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது உங்கள் பேச்சையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கண்காணிப்பு மிக முக்கியம். நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வாரம் ஆடம்பரமான காரியங்களில் மனம் ஈடுபடும். அதற்காக அனாவசியமாக செலவு செய்வீர்கள். அதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கணக்கு வழக்குகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் சாதகமான பலன்களை பெறுவார்கள். நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை இந்த வாரம் திரும்பப் பெறுவீர்கள். சில புதிய திட்டங்களில் முதலீடு செய்ய இந்த வாரம் மிகவும் ஏற்றது. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். தள்ளிப்போன திருமணங்கள் நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். எந்த காரியத்தையும் சொந்த புத்தியில் நடத்த முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் நல்ல நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அதிக ஆசைப்பட்டு புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். தாய் வழி சொத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவார்கள். இந்த வாரம் தொழிலதிபர்கள் வேலை விஷயமாக வேறு மாநிலம் செல்ல நேரிடலாம். இந்த வாரம் உங்கள் மூத்த சகோதரர் அல்லது சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், பணியிடத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கலாம். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் வெற்றி கொடி நாட்டுவீர்கள். புதிய இடம் வாங்க திட்டம் போடுவீர்கள். அதற்கான ஏற்பாட்டை உங்கள் நண்பர்கள் செய்வார்கள். இந்த வாரம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் உங்களின் நிம்மதியை கெடுக்கலாம். குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிதி விஷயங்கள் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வாரம், குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடைபெறலாம். இந்த வாரம் கூட இருந்து குழி பறிக்கும் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை முறியடிப்பீர்கள். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து வாங்கிய கடனை அடைப்பார்கள். விவசாயத்தில் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் மனைவியிடையே சில வாக்குவாதம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு மனம் உவந்து உதவி செய்வீர்கள். ஆனால் அந்த நன்றியை அவர்கள் நினைக்க மாட்டார்கள்.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த வாரம் உங்கள் இளைய சகோதரர்கள் உங்களிடம் கடன் கேட்கும் வாய்ப்பு உள்ளது.இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.‌ இந்த வாரம் அலுவலகத்தில் உள்ள நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்குவதில் அக்கறை காட்ட வேண்டும். மேலும் உழைப்புக்கு தகுந்த ஊதியம் பெறுவீர்கள். தொழில் துறைக்கு குட்டி குட்டி பிரச்சனைகள் தோன்றி முட்டுக்கட்டை போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

இந்த வாரம் துலாம் ராசிக்காரர்கள் நல்ல நிதி லாபத்தைப் பெற முடியும். பொறியியல், சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கத்தை விட இந்த நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் விருப்பப்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுவதற்கான நல்ல செய்தி கிடைக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் தோன்றும். ஆனால் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதரர் வகையில் செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். தெரியாத தொழிலில் அதிகமான முதலீடு செய்ய வேண்டாம். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். திருமண விஷயத்தில் இருந்த இடையூறுகள் விலகி கல்யாணம் கைகூடிவரும்.

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன ஆரோக்கியமும் மிகவும் சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார வரவு அதிகரிக்கும். வியாபாரிகள் வெற்றிகரமாக வியாபாரத்தை நடத்தி பணவரவை பெருக்குவார்கள். இந்த வாரம் வெளியூர் பயணம் செல்லும் நபர்கள் நல்ல பலனை காண்பார்கள். வார மத்தியில் சிலருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் எதிர்பார்த்த இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.‌ இந்த வாரம் நீங்கள் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். இந்த வாரம் உங்கள் மனம் பல விஷயங்களால் குழப்பமடையக்கூடும். அதனால் சற்று கவனமாக இருக்கவும்.‌ உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால், நீங்கள் நிச்சயமாக வெற்றியும் மரியாதையும் பெறுவீர்கள். தந்தைக்கு உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். அரசு ஊழியர்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள். இந்த வாரம் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் அதிக நாட்டம் கொள்வீர்கள். தொழிலுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் பல எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவார்கள். தொழில் தொடர்பான முக்கியமான விஷயங்களை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் கல்வித்துறையில் இருந்து வந்த அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சற்று கசப்பாக இருக்கலாம். வெளியூர் பயணங்களால் குடும்பத்தை விட்டு சிறிது நாட்கள் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகலாம்‌.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி விஷயத்தில் கவனம் தேவை. இந்த வாரம், உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சச்சரவுகளும் நீங்கும். இந்த வாரம் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். வேலையில் கூடுதல் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் மேலதிகாரிகளிடமிறுந்து பாராட்டை பெறலாம். வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம் வருகின்ற பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். இந்த வாரம் வேளையில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த வாரம் கொடுக்கல் வாங்கலில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். வீடு தொடர்பான முதலீடுகளை செய்ய இது நல்ல காலம். இந்த வாரம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் விருப்பம் இந்த நேரத்தில் நிறைவேறும். திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். இந்த வாரம் தேவையில்லாத செலவுகள் வந்து திக்கு முக்காட வைக்கும்.

இதனையும் படியுங்கள் : ஜூன் மாத ராசிபலன் 2024