இட்லி தோசைக்கு நம்ம நிறைய விதமான சட்னிகள் செஞ்சிருப்போம் தேங்காய் சட்னி உளுந்தம் பருப்பு சட்னி தக்காளி சட்னி கார சட்னி, மல்லி சட்னி, கருவேப்பிலை சட்னி எக்கச்சக்கமான சட்னி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா கதம்ப சட்னி செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா இதே மாதிரி ஒரு தடவை கதம்ப சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க எத்தனை இட்லி தோசை சாப்பிடுகிறீர்கள் என்று கணக்கே இல்லாம போகும். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமாவே இருக்கும். இதுல தக்காளி வெங்காயம் மல்லி இலைகள் புதினா இலைகள் எல்லாத்தையும் சேர்த்து செய்றதால இதோட சுவை நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்டா டிஃபரண்டாகவும் இருக்கும்.
நிறைய பேர் வீட்ல இந்த சட்னியை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த செய்முறையில் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் இதே மாதிரி தான் எப்பவுமே நீங்க கதம்ப சட்னி செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு நீங்க இந்த சட்னியை செஞ்சு கொடுங்க சாப்பிட்டு கண்டிப்பா பாராட்டிட்டு உங்ககிட்ட ரெசிபி கேட்டு தான் போவாங்க. ஒரு சிலர் வீட்ல இட்லி தோசைக்கு ரெண்டு மூணு சட்னி செய்வாங்க ஆனா இந்த கதம்ப சட்னி செஞ்சா இந்த ஒரு சட்னியே போதும் நிறைய சட்னி செய்யணும் அப்படின்ற அவசியம் கிடையாது. இவ்ளோ ஒரு டேஸ்டான கதம்ப சட்னியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
கதம்ப சட்னி | Kadamba Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 4 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கைப்பிடி புதினா
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 2 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதன் பிறகு ஒரு இன்ச் புளி ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி புதினா இலைகள் தேங்காய் துருவல் பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
- இப்பொழுது வறுத்து வைத்துள்ள பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு வதக்கிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான கதம்ப சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இனி எப்போதும் ஒரே மாதிரியான சட்டியை செய்யாமல் ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்!!