கடுகுக்குள் இதை மட்டும் புதைத்து வையுங்கள் போதும்! பணம் வீடு தேடி வந்து சேர்த்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பணம் நம்மிடம் சேர்வதற்கு உழைக்க தான் வேண்டும் என்று சொன்னாலும் பலர் வருட கணக்காக அயராது உழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் என்பதே இருக்காது. என்னதான் அவர்களும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்புடன் அதிர்ஷ்டம் என்று ஏதாவது இருந்தால் தான் பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பணம் நம்மிடம் சேர்வதற்காக பெரிய அளவில் எதுவும் செய்ய வேண்டாம். எளிமையாக தானம் தர்மம் செய்தாலே போதும் உங்கள் கையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். மேலும் பண புழக்கமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் ஆன்மீக ரீதியாக பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தேவையானவை

நாம் நம் வீட்டில் பணம் சேர்வதற்காக தாந்திரீக ரீதியான ஒரு பாரிகாரம் தான் செய்ய போறோம். இந்த பரிகாரம் செய்ய நமக்கு ஒரு டப்பாவும், 150 கிராம் அளவுள்ள கடுகும் தேவைப்படும். நீங்கள் எடுத்திருக்கும் டப்பாவை பொருத்து அதற்கு தேவையான அளவு கடுகை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் இந்த பரிகாரம் செய்ய எடுத்துக் கொள்ளும் டப்பா பிளாஸ்டிக், சில்வர் இப்படி எந்த உலகத்தால் செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் உண்டியல் போன்ற டப்பாக்களை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் சாவி போட்டு பூட்டி வைப்போம் அல்லவா இது போன்ற உண்டியலை பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

கடுகு பரிகாரம்

இப்படி எங்கள் எடுத்துக் கொண்டு டப்பாவில் கடுகை நிரப்பி வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இந்த இரண்டு நாட்களில் நம் கடுகு நிரப்பி வைத்திற்கும் இந்த டப்பாக்களில் ஐந்து ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும் நீங்கள் அடுத்த முறை இந்த டப்பாவை திறக்கும் போது உங்கள் கண்ணில் கடுகு மட்டுமே பட வேண்டும் அந்த அளவிற்கு நாணயத்தை கடுக்குள் புதைத்து வைக்க வேண்டும். மேலும் குறிப்பாக ஐந்து ரூபாய் நாணயத்தை கடுகுக்குள் புதைத்து வைத்து செய்யும் இந்த பரிகாரத்தை நீங்கள் வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது நான் இப்படி செய்கிறேன் என்று ரகசியமாக இதை பார்த்துக் கொள்ளுங்கள்.

தான தர்மம்

இப்படி ஒரு வாரத்திற்குள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என இரண்டு நாணயங்கள் போட்டு வரும் போது நான்கு வாரத்தில் அந்த கடுகு ட்டப்பாக்குள் 8 நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதாவது ஒரு மாதத்தில் நான்கு வாரங்கள் என்று கணக்கு வைத்து கொள்ளுங்கள். இப்படி ஒரு மாதம் இந்த கடுகு டப்பாவில் நீங்கள் நாணயங்களை போட்டு வந்ததும் அந்த மாதம் முடிந்த பிறகு நீங்கள் கடுகு டப்பாவிற்க்குள் புதைத்து வைத்திருந்த அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து முடியாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு அந்த நாணயங்களை வைத்து ஒருவேளை உணவாக வாங்கி கொடுத்து வரலாம். இப்படி நீங்கள் கடுகு டப்பாவில் நாணயத்தை புதைத்து வைத்து பின் அந்த நாணயத்தை எடுத்து தான தர்மம் செய்யும்போது பணத்திற்கே உங்கள் மீது ஒரு ஆசை வரும் உங்களிடம் சேர வேண்டும் என்று.

பரிகாரம் வேலை செய்யும் விதம்

மேலும் நாம் இந்த பரிகாரம் செய்வதற்காக நாம் எடுத்துக் கொண்டுள்ள கடுகு நல்ல சக்திகளை அதிகம் ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டுள்ளது. அதனால் இந்த டப்பாவில் நாம் கடுகை வைத்து அதில் நாணயங்களை போட்டு வைக்கும் போது கடுகு பணத்தை ஈர்த்துக் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கும். மேலும் நீங்கள் கடுகு டப்பாவிற்குள் போட்டு வைத்திருந்த நாணயங்களை தான தர்மங்களுக்காக செலவு செய்யும் போது இதன் சக்தியானது பல மடங்கு பெருகி பணமானது பல மடங்கு பெருகி உங்கள் கைக்கு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் இந்த பரிகாரம் செயல்படும் விதம். மேலும் இந்த கடுகு டப்பாவில் நீங்கள் சேர்த்த நாணயங்களை வைத்து தானம் தர்மம் செய்யும்போது குறிப்பாக செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது பதிலாக வேறு தினங்களில் செய்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

மூன்று மாதம் ஒருமுறை

மேலும் நீங்கள் இந்த டப்பாவில் போட்டு வைத்திருக்கும் கடுகை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம் பழைய கடுகை எடுத்துவிட்டு மனிதனின் காலடி படாத இடங்களில் போட்டுவிட்டு மீண்டும் புதியதாக கடுகை சேர்த்து. அதில் ஒரு மாதம் நாணயங்களை போட்டு. பின் ஒரு மாதம் கழித்து சேர்ந்த்நாணயத்தை எடுத்து தானதர்மம் செய்து உங்கள் பரிகாரத்தை இப்படி தொடர்ந்து செய்து வரலாம். இப்படி நீங்கள் செய்யும் பொழுது மூன்று மாதத்திற்குள்ளாகவே அதற்கான பலனை நீங்கள் பார்ப்பீர்கள் அதாவது உங்கள் கையில் சிறிது சிறிதாக பணம் சேர தொடங்குவதை நீங்களே உணர ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் நம்பிக்கை உடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : வீட்டிற்கு பணம் தடை இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here