என்னதா வீட்ல மீன் வறுவல் கணவாய் வறுவல் மீன் குழம்பு அப்படின்னு எல்லாமே வெச்சாலும் பீச்ல கிடைக்கிற சில உணவுகளுக்கு நம்ம ரொம்ப அடிமையா இருப்போம். அதே மாதிரி டேஸ்ட்ல வீட்ல யாராவது செஞ்சு கொடுக்க மாட்டாங்களா அப்படின்னு ஏங்குவோம் ஆனா இனிமேல் அந்த மாதிரி எங்க தேவை இல்லை பீச்சில் கிடைக்கிற அதே மாதிரியான சுவையில ரொம்ப குறைவான பொருட்களை வச்சே நம்மளை வீட்டில் சூப்பரான மீன் வறுவல் கணவாய் வறுவல் எல்லாமே செய்யலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான கணவாய் தவா ஃப்ரை தான் பார்க்க போறோம் பீச்ல கிடைக்கிற அதே டேஸ்ட்ல நல்லா காரசாரமா புளிப்பா சூப்பரா இருக்கும்.
இதே மாதிரி உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு கொடுத்து பாருங்க கணவாய் மீன் வறுவல் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த ரெசிபியை நீங்க செஞ்சு கொடுத்து அசத்தலாம் வீட்டில் இருந்து கூட இந்த கணவாய் தவா ப்ரை செஞ்சுட்டு பீச்சுக்கு போய் அங்க உக்காந்து இதை சாப்பிட்டுக்கிட்டே என்ஜாய் பண்ணலாம். ரசம் சாதம் கூட இந்த கணவாய் மீன் ப்ரை வைத்து சாப்பிட்டால் பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். கண்டிப்பா நீங்களும் ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த அட்டகாசமான கணவாய் தவா ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கணவா தவா ஃப்ரை | Kanava Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கி கணவா மீன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கணவாய் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்த உங்களுக்கு தேவையான வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், மிளகுத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது பொடிப்பொடியாக நறுக்கிய கருவேப்பிலை எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு தோசை சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஊற வைத்துள்ள கணவாய் மீன்களை சேர்த்து நன்றாக கிளறி எண்ணெயிலேயே வேக வைத்து இறக்கினால் சுவையான கணவாய் தவா ப்ரை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசிக்க ருசிக்க கணவாய் கிரேவி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! பிரமாதமான சுவையில்!