Home அசைவம் கமகமக்கும் சுவையான கனவா மீன் தொக்கு செய்வது எப்படி ?

கமகமக்கும் சுவையான கனவா மீன் தொக்கு செய்வது எப்படி ?

பெரும்பாலான நபர்கள் வீட்டில் இந்த கனாவா மீன் தொக்கு செய்வது கிடையாது ஏனென்றால் இங்கு பலருக்கும் இந்த கனவா மீன் தொக்கு வைக்கத் தெரியாது. அதனால் குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இந்த கனவா மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு முறை இந்த கனவா மீன் தொக்கு செய்து சாப்பிட்டால் அதன் சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

இந்த கனவா மீன் தொக்கை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும். அதனால் இன்று இந்த கனவா மீன் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
4 from 1 vote

கனவா மீன் தொக்கு | Kanava Meen Thokku Recipe In Tamil

இங்கு பலருக்கும் இந்த கனவா தொக்கு வைக்கத் தெரியாது. அதனால் குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இந்த கனவா உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு முறை இந்த கனவா தொக்கு செய்து சாப்பிட்டால் அதன் சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். இந்த கனவா தொக்கை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: LUNCH, Thokku
Cuisine: Indian, TAMIL
Keyword: Kanava Fish, கனவா மீன்
Yield: 4 people
Calories: 135kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ கனவா மீன்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ½ டேபிள் ஸ்பூன் தனியாத் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு சிறிதளவு
  • சீரகம் சிறிதளவு
  • சோம்பு சிறிதளவு
  • பட்டை சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு காடையை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், தனியாத்தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.
  • அடுத்து அதில் சுத்தம் செய்த கனவா மீனை சேர்த்து வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.
  • இப்பொழுது சுவையான கனவா மீன் தொக்கு தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 135kcal | Carbohydrates: 2g | Protein: 11g | Fat: 1g | Saturated Fat: 0.6g | Cholesterol: 10mg | Sodium: 4mg | Potassium: 89mg | Sugar: 1.2g

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here