இரு மனம் இணையும் திருமண வாழ்வு என்பது எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. திருமண நாளில் கூட தம்பதிகளை வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து ஒங்கும் வகையில் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல், விட்டுக் கொடுத்தல், பொறுமை இல்லாத காரணத்தால் சிறு பிரச்சனைக்கு கூட குடும்பமே சிதைந்து போகும் நிலை ஏற்படுகிறது. ஒரு வீட்டில், தம்பதி ஒற்றுமையுடனும் பொறுமையுடனும் கனிவுடனும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தால், அந்தக் குடும்பத்தில் வேறு உறவுகளிடையே விரிசல் ஏற்பட்டாலும் கூட, அவற்றை சரிசெய்துவிடுவார்கள் தம்பதிகள். அப்பேர்ப்பட்ட வலிமை மிக்க தம்பதி இடையே ஒற்றுமை இல்லாமல் போனால், அந்தக் குடும்பத்தின் நிலையை சரிசெய்யவே முடியாமல் போய்விடும்.
விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்பதற்கேற்ப திருமண வாழ்வில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வாழ்க்கை என்னும் வண்டி சுமுகமாகச் செல்லும். ஆனால் நான் மட்டும் ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. அதன் பலன் உறவில் விரிசல், பிரிவினை. ஈகோ காரணமாக, சரியான புரிதல் இல்லாததால் பிரிந்து வாழும் கணவன் – மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு சில எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தாலே நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

பரிகாரம் 1
நம்முடைய வீட்டில் ஒற்றைச் செடியாக சில செடிகளை வளர்த்தால் அவர்களுடைய வீட்டில் பிரச்சினைகள், தம்பதியர் ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த வகையில் தான் கறிவேப்பிலைச் செடி மற்றும் பப்பாளி செடி அமைந்துள்ளது. இது இரண்டையும் தனித்தனியாக வளர்க்க கூடாது. வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும். இந்த இரண்டு செடி வகைகளில் ஒரு செடியை மட்டும் தனியாக வளர்ப்பது அவ்வளவு நல்லது அல்ல என்கிறது சாஸ்திரம்.
வீட்டுத் தோட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களிலும் பப்பாளி மரம் காணப்படுகின்றது. இந்த பப்பாளி மரம் குருபலம் பொருந்திய மரமாகும். இதில் ஆண் பெண் என இரண்டு வகைகள் உள்ளன். நாம் வீட்டில் இதை வளர்க்கும் போது பெண் மரத்தை தான் வளர்க்க வேண்டும். பப்பாளி மட்டுமல்ல கறிவேப்பிலை மிகவும் மகிமை வாய்ந்த செடி. சதா சண்டை, சச்சரவு என்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்பவர்கள் இந்த இரண்டு மரங்களையும் தினமும் தண்ணீர் ஊற்றி வீட்டில் வளர்த்து வாருங்கள். அவைகள் வளர வளர உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

பரிகாரம் 2
வீட்டில் மரங்களை வளர்க்க முடியாதவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் பெருமாள் மகாலட்சுமி. தினமும் காலையில் எழுந்து குளித்து பெருமாள் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபட்டு, பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்யுங்கள் அங்கு தரும் குங்குமப் பிரசாதத்தை தாலிச்சரடில் இட்டுக் கொள்ளுங்கள். இதனால் விரைவில் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்.நீங்கள் கோவிலுக்குச் செல்லும் போது கறிவேப்பிலை சாதத்தை வீட்டில் இருந்து தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த சாதத்தை பிரசாதமாக அளியுங்கள். பிறகு கோவிலுக்கு வரும் வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை என்று வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் சனிக்கிழமை பெருமாளை வணங்க தனிச் சிறப்பு வாய்ந்தது. எனவே அன்று ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. பொருமாளின் அருளால் கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் தங்கம் சேர வேண்டுமானால் ? இரகசியமாய் யாருக்கும் தெரியாமல் இதை மட்டும் செய்து விடுங்கள்!


