- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening
இப்போ கந்த சஷ்டி விரதம் நடந்துகிட்டு இருக்கு இந்த காலகட்டத்தில் நிறைய பேரு விரதம் இருப்பாங்க ஒரு சில பேரு சுத்தமா சாப்பிடாம விரதம் இருப்பாங்க. ஒரு சில சாப்டுட்டு கடவுளை மனதார நினைத்து விளக்கு ஏற்றி அவரை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில தினமும் மாலை நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் போது ஒவ்வொரு நெய்வேதியம் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த கந்தர் அப்பம் நெய்வேதியமாக செய்து வைத்து வழிபாடு செய்து பாருங்கள்.
இந்த கந்தர் அப்பம் செய்வது மிகவும் சுலபமான ஒன்று. அனைவருமே ஈசியாக இதனை செய்யலாம். சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும் இதே செய்முறையை பின்பற்றி இதே அளவுகளில் இந்த ரெசிபியை செய்து பார்த்தால் கரெக்டா வரும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இதை செஞ்சு சாப்பிடுவீங்க. பொதுவா அப்பம் மைதா மாவுல செஞ்சு ஒரு சிலர் சாப்பிடுவாங்க ஆனா பச்சரிசியை ஊறவைத்து அரைச்சு இந்த மாதிரி கந்தர் அப்பம் செஞ்சு பாருங்க.
ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வெறும் நான்கு பொருட்கள் வைத்து சூப்பரான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. ஈவினிங் ஸ்நாக்ஸாக கூட இந்த ரெசிபியை சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நிறைய கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அதனால நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. இப்ப வாங்க இந்த சுவையான கந்தர் அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருகனுக்கு உகந்த திருப்பாகம் ரெசிபி செய்து உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே கொடுங்க!
Ingredients
Method
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் ஏலக்காய் தேங்காய் துண்டுகள் ஊறவைத்த அரிசி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது சூடான எண்ணெயில் ஒரு கரண்டி மாவு முற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கந்தர் அப்பம் தயார்.






