- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 27 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
பொதுவாக சிக்கன் என்றாலே அனைவர்க்கும் செட்டிநாடு சிக்கன் தான் நியாபகம் வரும். ஆனால் செட்டிநாடு சிக்கன் போன்றே காரைக்குடி சிக்கனும் ருசியாக இருப்பதோடு, நல்ல கரசரமாகவும் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
இந்த காரைக்குடி சிக்கன் கறி செய்வது மிகவும் ஈஸி, சுலபமாகவும், ருசியாகவும் செத்து விடலாம். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.
Ingredients
Method
முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சிவக்க வறுக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு நைசாக ஆராய்த்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை, மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். ( பச்சைமிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்) அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைய வதங்கியதும் சாம்பார் பொடி, அல்லது மிளகாய் பொடி, தனியா தூள், சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
தூள் வாசனை போனவுடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். நீர் சேர்க்க தேவை இல்லை சிக்கனில் இருந்து வரும் நீர் மசலோடு கலந்து மீண்டும் சிக்கன் அதனை முழுவதுமாக இழுத்துவிடும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.
பச்சை வாசம் போகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும் போது கறிவேப்பிலை, மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
இப்பொழுது சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார்.






