- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
எப்பவுமே டிபனுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை ரவை வைத்து கரண்டி தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த டேஸ்டான கரண்டி தோசையை ஒரே ஒரு தடவை வீட்ல செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த கரண்டி தோசைக்கு கார சட்னி, தக்காளி சட்னி இது எல்லாமே ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும்.
இந்த டேஸ்டான கரண்டி தோசை ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால கண்டிப்பா ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. காலையில டிபனுக்கு நைட் டிபனுக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான ரெசிபியாக இது இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க.
இதுல வெங்காயம், கேரட், கறிவேப்பிலை எல்லாமே தாளிச்சு போடுறதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். முக்கியமாக இப்படி தோசை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் காலையில் தாமதமாக எழுந்துவிட்டால், டக்கென்று ஒரு காலை டிபன் செய்ய நினைத்தால், இதை செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு எளிமையான கோல்டன் பிரட் டோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ரவை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, பேக்கிங் சோடா, கொத்தமல்லி, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, நாம் செய்து வைத்துள்ள கலவையில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கரண்டி தோசை தயார்.






