பன் போன்று மிருதுவாக கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி ?

- Advertisement -

கரண்டி ஆம்லெட் என்று சொன்னவுடன் எனக்கு ஒரு செவி வழி கதை தான் ஞாபகம் வருகிறது. எனது ஒரு நண்பர் என்னிடம் ஒருமுறை கூறினார் கரண்டி ஆம்லெட் திண்டுக்கல் பகுதியில் ஒரு பாட்டி கடையில் தான் செய்யப்பட்டதாம். ஹோட்டல் வைத்து நடத்தி வைத்து கொண்டிருந்த பாட்டி ஒரு முறை உணவு தீர்ந்து கடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த லாரி டிரைவர்கள் பசிக்கிறது சாப்பாடு இருக்கிறதா என்று கேட்டார்களாம். அந்த பாட்டி சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லவும் இரவு நேரமாக இருந்தவுடன் வேறு எதுவும் கடைகள் இல்லாதால்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அறுசுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ?

- Advertisement -

அந்த டிரைவர்கள் சிறிது மிச்சம் மீதி சாப்பாடு எதுவும் இருக்கிறதா என்று மறுபடியும் கேட்க. பாட்டி மனது கேட்காமல் முட்டை மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லி எரிந்து முடிந்து விறகு இருந்த கனலில் கரண்டியை வைத்து சற்று எண்ணையை ஊற்றி முட்டையை சமைத்து கொடுத்தார்களாம். இப்படித்தான் கரண்டி ஆம்லெட் வந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் செய்ய தெரியும் இன்றையதொகுப்பில் கரண்டி ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்

Print
No ratings yet

கரண்டி ஆம்லெட் | Karandi Omelette Recipe in Tamil

முட்டையில் இருக்கும் லூட்டின் என்ற பொருள் நம் கண்களுக்கு வலு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் முட்டையில் உள்ள செலினியம் என்ற பொருள் நமது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்கும் மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா 3 என்ற பொருள்ளும் முட்டையில் இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கும் இவ்வளவு சத்து நிறைந்த முட்டையில் பன் போன்ற கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: karandi omelette, கரண்டி ஆம்லெட்
Yield: 2 person
Calories: 155kcal

Equipment

  • 1 சிறிய கடாய்
  • 1 பவுள்
  • 1 பெரிய அளவு குழி கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2  முட்டை
  • 15 சின்ன வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்த மல்லி சிறிது

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து பொடி கொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சிறிது எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின் சிறிய கடாயை ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி, மிளகாய் பொடி மூன்றையும் போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். அதன் பின் இரண்டு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனுடன் வத வைத்திருக்கும் வெங்காயங்களை போட்டு நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு நன்றாக அடியுங்கள். பின்பு கரண்டி சூடாகியவுடன் கரண்டி பிடிக்கும் அளவிற்கு உள்ளே முட்டையை ஊற்றி விடுங்கள்.
  • முட்டை ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் வேகவிட்டுக் கொள்ளுங்கள் இப்படியாக மீதம் இருக்கும் முட்டையும் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கரண்டி ஆம்லெட் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 2people | Calories: 155kcal | Carbohydrates: 1.1g | Protein: 13g | Fat: 11g | Saturated Fat: 3.3g | Cholesterol: 373mg | Sodium: 124mg | Potassium: 126mg | Sugar: 1.1g

English Overview: karandi omelette is one of the most important sidedishe in tamilnadu. Karandi omelette recipes or karandi omelette Seivathu Eppadi Or karandi omelette recipe in Tamil are a few important terms to describe this recipe in the Tamil language.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here