கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். பலருக்கும் கடன் பிரச்சனை என்பது பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டே இருக்கும். கடனை அடைப்பதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் எதுவும் பலன் அழிக்கவில்லை. கடன் இருந்து கொண்டே இருக்கிறது என புலம்புபவர்களை தான் அதிகமாக பார்க்க முடியும். அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்டவர்கள் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் சில எளிய விஷயங்களை செய்தாலே போதும் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த எளிய விஷயங்களை நாம் கடைபிடித்தால் முன்னோர்களின் ஆசி பெறலாம், நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும், திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற அனைத்திலிருந்தும் விடுபடலாம். இதற்கு கார்த்திகை அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
கார்த்திகை அமாவாசை

மார்கழி மாதம் பாவங்களை போக்கும் புனிதமான மாதம் என்பதால் கார்த்திகை மாத இறுதியில் வரும் அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். கார்த்திகை அமாவாசையை பெளமாவதி அமாவாசை என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசையானது டிசம்பர் 12 ம் தேதி வருகிறது. இது 2023 ம் ஆண்டின் கடைசி அமாவாசையாகும். டிசம்பர் 12 ம் தேதி காலை 06.23 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 05.49 வரை அமாவாசை திதி உள்ளது. இந்துக்களின் வழிபாட்டு நாட்களில் மிக முக்கியமான நாள் அமாவாசை. வருடத்தில் 12 அமாவாசை வந்தாலும் கார்த்திகை அமாவாசை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்தாகவும் இருக்கின்றது. அதுவும் நிதி தொடர்பான பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு இது மிக முக்கியமான நாளாகும்.
முன்னோர்கள் வழிபாடு
கார்த்திகை மாத பெளர்ணமியை எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையும் ஏராளமான சிறப்புக்களை கொண்டது. அதனால் கார்த்திகை அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு செய்தால் நீங்கி, செல்வ வளம் பெருகும். நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்தப்படுத்துவதற்காக நீராடி, தர்ப்பணம், அளிக்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே மற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.
அன்னதானம்
கார்த்திகை அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு வாழைப்பழம் அகத்துக்கீரை கொடுப்பது போன்றவை செய்ய வேண்டும். பசு, காகம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளித்த பின்னர் ஆதரவு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு அன்னதானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
சனி தோஷம் நீங்க
கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்த தினத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பின் சனி பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ண ஊற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதும் நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாமல் ஆடை தானம் வழங்குவதன் மூலம், சனி தோஷத்திலிருந்து நாம் விடுபடலாம். கெட்ட காலத்திலும் சனியின் பார்வை நன்மை பயக்கும்.
அரசமர வழிபாடு
அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக விரதம் இருந்து அரச மரத்தை 11 முறை சுற்றி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அரச மரத்திற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து வழிபடலாம். அல்லது பால் ஊற்றி வழிபடலாம்.
நெய் விளக்கு
கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று பாற்கடலில் லட்சுமி தேவி அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் சூரிய அஸ்தமனத்தின் போதும் 5 நெய் விளக்குகளை வீட்டில் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசிகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், செல்வ வளமும் பெருகும்.
வேலை கிடைக்க
அமாவாசை தினத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். இரவு நேரத்தில் அதை நான்காக வெட்டி குங்குமம் வைத்து யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அவரின் தலையைச் சுற்றி, ஆளில்லாத இடத்தில் இரவு நேரத்தில் தூக்கி எறிந்து விடுங்கள். இதை செய்யும் பொழுது வேலை வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். அதனுடன் கண் திருஷ்டி இருந்தால் அதுவும் நீங்கிவிடும்.
இதனையும் படியுங்கள் : சோகம் தீர்க்கும் சோமவார விரதம் இருப்பது எப்படி? சோமவார விரதம் இருப்பதன் பலன் மற்றும் அதன் வரலாறு!


