ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. அதேபோல் இஷ்ட தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். எந்த தெய்வம் இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தையும் மனதார வழிபாடு செய்யும்போது குல தெய்வத்தினுடைய அருளும் இஷ்ட தெய்வத்துடைய அருளும் சேர்ந்து கிடைக்கும். இருவருடைய அருளையும் ஒரு சிறப்பெற்றால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய இஷ்ட தெய்வ வழிபாட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இஷ்ட தெய்வ வழிபாடு
ஏதோ ஒரு காரணத்திற்காக சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வத்தை மிகவும் பிடித்திருக்கும். நாம் வேண்டிய வரத்தை எந்த தெய்வம் நமக்கு கொடுக்கிறது அந்த தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வைத்து வழிபாடு செய்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு சிலருக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருக்கும் ஒரு சிலருக்கு அம்மன் ஒரு சிலருக்கு சிவபெருமான் ஒரு சிலருக்கு விநாயகர் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இஷ்ட தெய்வத்தை பிடித்திருக்கும் அப்படிப்பட்ட இஷ்ட தெய்வத்தை கார்த்திகை மாதத்தில் இப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
கார்த்திகை மாத வழிபாடு
கார்த்திகை மாதம் முழுவதும் எந்த முறையில் வழிபாடு செய்தாலும் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இஷ்ட தெய்வத்துடைய ஆலயத்திற்கு சென்று இயன்ற அளவுக்கு இஷ்ட தெய்வத்தின் ஆலயத்தை சுற்றிவர வேண்டும். கார்த்திகை மாதத்தில் 18 முறை வலம் வந்துவிட்டால் நாம் வருகின்ற கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. 18 முறை வலம் வர முடியாதவர்கள் 18 முறை கையெடுத்து இஷ்ட தெய்வத்தை கைகூப்பி வணங்கி வர வேண்டும். இஷ்ட தெய்வத்திற்கு பிடித்த பொருட்களை வைத்து இலட்ச்சார்ச்சனை செய்ய வேண்டும்.
இஷ்ட தெய்வத்திற்கு பிடித்த பொருட்கள்
வில்வ இலை துளசி இலை நவதானியங்கள் கோதுமை பச்சரிசி போன்றவற்றை வைத்து தினமும் இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தால் நாம் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தில் ஆரம்பித்து முழுவதுமாக செய்து முடித்தால் இந்த மாதத்திற்குள் நிச்சயமாக இஷ்ட தெய்வத்தின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் முழுவதுமாக பெற முடியும்.
இதனையும் படியுங்கள் : எல்லா கடனும் அடைய கார்த்திகை அமாவாசையில் இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்


