- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடுத்துவிட்டதா? அப்படியானால் சத்தான மிகவும் சுவையான கத்திரிக்காய் கார தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள்.
வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது காலை உணவுக்கு ஏற்றது. காலை உணவிற்கு எப்பவும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று சாப்பிடாமல் இந்த மாதிரி ருசியான கத்திரிக்காய் கார தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்கள். இந்த சுவையான தோசையை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினர் இனி தோசை மட்டும் போதும் என்பார்கள். இப்போது இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் கார தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தவா வறுவல்
Ingredients
Method
முதலில் அரிசியை நன்கு அலசி விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வட்டமாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், மல்லி, சீரகம், தேங்காய் துருவல், ஊற வைத்த பச்சரிசி, உப்பு, காய்ந்த மிளகாய், புளி, வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வேகவைத்த கத்தரிக்காயை நன்கு மசித்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் கலந்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் கார தோசை தயார்.






