பொதுவாக நான் வீட்டில் சிக்கன் எடுத்தால் எப்பொழுதும் போல் சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு மற்றும் சிக்கன் ப்ரை என ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை நாம் செய்து கொடுப்போம். இப்படியாக சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கும் சலித்து போய் இருக்கும் நாம் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போய் இருக்கும். அதனால் இன்று நாம் கேரளாவில் சிக்கன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி ?
ஆம் இது போன்ற உங்கள் வீட்டில் அவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் உங்கள இது போல செய்து தரச் சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த கேரளா ஸ்டைலில் சுவையான சிக்கன் வறுவல் எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேரளா சிக்கன் வறுவல் | Kerala Chicken Varuval Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- ½ கிலோ சிக்கன்
- 1 ஸ்பூன் சோம்பு
- 7 காய்ந்தமிளகாய்
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
- முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு மிக்சியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
- பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
- தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
- இப்பொழுது கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி.