மீன் ப்ரை நீங்க நிறைய முறையில செஞ்சி இருப்பீங்க. ஆனா கேரளா ஸ்டைல் கிரீன் ஃபிஷ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. சாப்பிடுறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான சுவையில இருக்கும் எப்பவுமே ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை கேரளா ஸ்டைல் கிரீன் ஃபிஷ் ஃப்ரை செஞ்சு பாருங்க. இதுல நம்ம காரத்துக்காக பச்சை மிளகாய் மிளகு சேர்க்கிறோம் இது எல்லாத்தையும் மிக்ஸி ஜாரில் அரைச்சு சேர்க்கும் போது சுவை சூப்பரா இருக்கும். அரிசி மாவு சோள மாவு அப்படின்னு எதுவுமே சேர்க்காமல் மொறு மொறுன்னு ஒரு சூப்பரான ஃபிஷ் ஃப்ரை செய்ய முடியும்.
நல்லா காரசாரமா புளிப்பா மீன் குழம்பு வச்சு அந்த மீன் குழம்புக்கு சைடிஷா இந்த பிஷ் ஃப்ரை செஞ்சு பாருங்க கண்டிப்பா எத்தனை ஃபிஷ் ஃப்ரை சாப்பிடுறோம் அப்படின்னு கணக்கே இல்லாம சாப்பிடுவீங்க. உங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே இந்த கேரளா ஸ்டைல் ஃபிஷ் ஃப்ரை கண்டிப்பா பிடிக்கும். இதுல கொத்தமல்லி நிறைய சேர்க்கிறதால நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இந்த மாதிரி இந்த கிரீன் பிஷ்ஷுக்கு நிறைய நன்மைகள் இருக்கு அப்படின்னு சொல்லலாம். இதுல இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் சேர்க்கிறதால சுவை இன்னும் அட்டகாசமா இருக்கும். பொதுவா சின்ன வெங்காயம் சேர்த்தாலே எல்லா ரெசிபியும் ரொம்ப அருமையா இருக்கும். அதே மாதிரி இந்த பிஷ் ஃப்ரையும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சு செய்றதால ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். மசாலாவை தடவி விட்டுட்டு நல்லா ஊற வச்சுட்டா ஃபிஷ் ஃப்ரை ரொம்பவே அருமையா மசாலா பிரியாம கிடைக்கும்.இந்த சுவையான ஆரோக்கியமான ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
கேரளா கிரீன் ஃபிஷ் | Kerala Green Fish Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கி ஜிலேபி மீன்
- 15 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 எலுமிச்சை பழம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை
- மிக்ஸி ஜாரில் வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி சீரகம், மிளகு, கொத்தமல்லி இலைகள் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- மீனை கழுவி சுத்தம் செய்து அதன் மேல் அரைத்து வைத்த மசாலாவை தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த மீனை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து பொரித்து எடுத்தால் சுவையான கேரளா ஸ்டைல் கிரீன் ஃபிஷ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!