இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தங்கள் அழகு சார்ந்த பக்கம் நம் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டோம். ஏனென்றால் ஒருவர் நம்மை பார்க்கும் போது அவர் கண்களுக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே தற்சமயம் உண்டு. ஆனால் இதற்காக நம் முகத்தில் ஏற்படும் கருவளையம், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் என முக அழகிற்கு கேடு விளைவிக்கும் சில பிரச்சனைகளை நீக்குவதற்கு சந்தையில் விற்கும் சில ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டோம்.
இதையும் படியுங்கள் : உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் நீக்கும் பொருட்கள் ?
ஆனால் அந்த அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்துவதனால் நமது சருமத்திற்கு எவ்வளவு தீங்கு என்பதை உணராமல் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். ஆகையால் இன்று இயற்கையான முறையில் எப்படி நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்வது அதற்காக எந்த பொருளை நாம் பயன்படுத்த போகிறோம் தெரியுமா நாம் வீட்டில் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கொத்தமல்லி இயற்கையான வழியில் எப்படி அழகு சாதன பொருளாக பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த அழகு சார்ந்த குறிப்பில் நாம் காணலாம்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
ஃபேஸ் மாஸ்க்
நான் சந்தையில் இருக்கும் கேமிக்கல்ஸ் அதிகம் கலந்த அழகு சாதன ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதற்கு இயற்கையாக கொத்தமல்லி இலைகளைக் கொண்டு ஒரு பேஸ்ட் மாஸ்க் தயார் செய்து அதை நம் பயன்படுத்தி வந்தால் நம்ம சருமத்திற்கு எந்த வித தீங்கும் இல்லாமல் இயற்கையான முறையில் பொலிவும் நிறமும் கிடைக்கும் அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் – கொத்தமல்லி இலை
1 டீஸ்பூன் – எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் – கற்றாழை ஜெல்
1 டீஸ்பூன் – ரோஸ் வாட்டர்
செய்முறை
முதலில் நம் எடுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு அதில் இருந்து கொத்தமல்லி சாறு எடுத்து ஒரு பவுளில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒர அல்லது எலுமிச்சைச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு இதனுடன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தின் ஒரு இருபது நிமிடங்கள் பேஸ் மாஸ்க் அப்ளை செய்து அதன் பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுத்தால் நமது சருமம் நிறமாகவும், பொலிவாகவும் இருக்கும் அதை உங்களாலே உணர முடியும்.
முகம் வெள்ளையாக மாற
ஒரு சில நபர்களுக்கு அவர்கள் முகத்திலேயே இரு வேறு இடங்கள் காணப்படும் ஆம் ஒரு சில இடங்களில் அவர்களின் முகத்தில் கருமை நிறம் படர்ந்திருக்கும் இன்னொரு பகுதி மற்றொரு பகுதியில் வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் இதை போக்குவதற்கு கொத்தமல்லி பயன்படுத்துவது சரியாக இருக்கும்
தேவையான பொருட்கள்
1 கப் – கொத்தமல்லி இலை
1 tbsp – தயிர்
1 tbsp – கற்றாழை ஜெல்
செய்முறை
கொத்தமல்லி இலையின் சாறு எடுத்து கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து அதன் பின்பு இதனுடன் சிறுது தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.
அதனை முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவி எடுத்தால் முகத்தில்
கருமை நிறம் நீங்கி முகம் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும்.