நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாகவும் இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருப்போம். அதிலும் சில நபர்களுக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு அசிங்கமாக தோற்றமளிக்கும் மேலும் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விடலாம். இன்று முகத்தில் எண்ணெய் பசையாக இருந்தால் அதை எப்படி நீக்குவது என்பதை பற்றி இந்த அழகு சார்ந்த குறிப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
எலுமிச்சை
எலுமிச்சை சாறு உதவியோடு நமது முகத்தில் உள்ள எண்ணெய் பசையையும் முற்றிலும் நீக்கிவிடலாம். ஆம், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் இந்த 3 பொருட்களையும். ஒரு பவுளில் ஒன்றாக சேர்ந்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள் அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக உலர விட்டு. அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவி எடுத்தல் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கிவிடும்.
இதையும் படியுங்கள் : உதடுகள் நிறமாகவும், மெண்மையாக இருக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள் ?
கோதுமை
உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கும் இயற்கை பொருட்களில் கோதுமையும் ஒன்றுதான். 1 டீஸ்பூன் கோதுமை மாவு, 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பவுளில் நன்றாக பேஸ்ட் போல் கலந்து தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீங்கிவிடும்.
மஞ்சள்
மஞ்சளும் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பவுளின் கலந்து ஒரு ஃபேஸ் பேக் தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து நன்கு காய்ந்து உலர்ந்ததும் பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்தால் எண்ணெய் பசை நீங்கும் எப்படி தினசரி ஒருமுறை செய்து வாருங்கள்.
தயிர்
தயிரும் நம் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுப்பதற்கு மிகச்சிறந்த இயற்கை பொருள். ஆம் தயிர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை உறிஞ்சி எடுத்து விடும். தயிரை முகம் முழுவதும் அப்ளை செய்து பின் தயிர் காயும் வரை காத்திருந்து. ஒரு 20 நிமிடம் கழித்து நமது முகத்தை கழுவி எடுத்தால் முகம் பொலிவுடனும், எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும்.
தக்காளி
தக்காளி நாம் முகத்தில் உள்ள எண்ணெய் பசைய நீக்குவது மட்டுமில்லாமல் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்றவற்றையும் நீக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு ஏற்ற ஒரு இயற்கை பொருள் என்றால் அது தக்காளி தான். ஒரு தக்காளியை பாதியாக வெட்டி முதலில் ஒரு தக்காளியை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து. அதன் பின்பு அடுத்த பாதியையும் எடுத்து முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின் நன்றாக கழுவி விடுங்கள் நான் முகம் பொலிவுடன் காட்சி தரும்.