பண கஷ்டங்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருகி லட்சுமி கடாட்சம் பெருக நாம் செய்ய வேண்டியவை..!

- Advertisement -

ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் கடன் பிரச்சினைகள் தீர்ந்து பண கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ முடியும். எனவே மகாலட்சுமி தேவியை இடைவிடாத வழிபட்டு வந்தால் நமக்கு செல்வவளம் பெருகும். அதிர்ஷ்ட தேவதையாக பார்க்கப்படும் மகாலட்சுமி தேவியார் செல்வத்திற்கு அதிபதியாவாள். ஒரு வீட்டில் மகாலட்சுமி தேவி வாசம் செய்தால் அந்த வீட்டில் பணப் பிரச்சனைகள் கடன் பிரச்சினைகள் போன்றவை ஒருபோதும் இருக்காது. எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழலாம். லட்சுமி கடாட்சம் நம் வீட்டில் பரிபூரணமாக இருக்க மகாலட்சுமி தேவியை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் மகாலட்சுமி தேவியின் அனு கிரகத்தையும் அருளையும் முழுமையாக பெற்று செல்வ செழிப்போடு வாழ நம் வீட்டில் செய்ய வேண்டிய சில வழிபாடுகள்.

-விளம்பரம்-

பணம் கொடுக்கல் வாங்கல் முறை

பொதுவாக நாம் ஒருவருக்கு பணம் கொடுக்கும் போதும் ஒருவரிடம் இருந்து பணத்தை வாங்கும் போதும் வீட்டின் நிலை வாசல் படியில் நின்று வாங்குவது கொடுப்பதும் கூடாது வீட்டிற்குள் நின்று தான் கொடுக்க வேண்டும். அதேபோல் பணம் கொடுக்கும் போதும் சரி வாங்கும் போதும் சரி செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை நேரத்தில் செய்தால் மிகவும் நல்லது பணம் கொடுப்பதற்கு பணம் வந்து சேரும் பணத்தை வாங்குபவர்களுக்கும் பணத்தை விரைவில் கொடுப்பதற்கான பண வரவு கிடைக்கும்.

- Advertisement -

நெல்லி மரம் வளர்த்தல்

மகாவிஷ்ணுவின் அம்சமான நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்த்தால் முழுமையான லட்சுமி கடாட்சத்தை பெற முடியும். நெல்லிக்காய் மரம் எந்தெந்த வீட்டில் எல்லாம் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்வார். நெல்லிக்கனிக்கு “ஹரிபலம்” என்ற ஒரு பெயர் உண்டு. எனது நெல்லிக்காய் மரம் தெய்வ சக்தி நிறைந்த ஒரு மரமாக கருதப்படுகிறது எனவே நம் வீட்டிலும் தெய்வ சக்தி நிறைந்திருக்கும். நம் வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் எந்த தீய சக்திகளும் நம் வீட்டை நெருங்க முடியாது. மகாலட்சுமி தேவியாரின் முழுமையான அருள் கிடைக்கும்.

பசுக்களுக்கு தானம்

பசு மாட்டிற்கு நான் ஏதேனும் ஒன்று சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தாலே மிகவும் நல்லது. கனிகள் காய்கறிகள் தீவனங்கள் என பசு மாட்டிற்கு வாங்கி கொடுத்தால் நம் வீட்டில் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்வார். தினந்தோறும் கூட பசு மாட்டிற்கு ஏதாவது வாங்கி கொடுத்தால் நாம் செல்வ செழிப்போடு வாழ முடியும்.

மகாலட்சுமி தேவிக்கு பிடித்தவைகள்

சுமங்கலிகள், குங்குமம் ,மஞ்சள் ,வாழை ,சந்தனம் ,பூக்கள், தீபம் ஏற்றுதல், கோலம் போடுதல் ,தோரணம் கட்டுதல், மாவிலை தோரணம், கண்ணாடி,உள்ளங்கை, பூரணகும்பம், துளசி மாடத்திற்கு விளக்கேற்றி அதனை சுற்றி வருதல் என இவை அனைத்தும் மகாலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த மானவைகள்.

-விளம்பரம்-

பெண்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்

பெண்கள் அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. மேலும் பெண்கள் வளையல் அணியாமல் யாருக்குமே உணவு பரிமாறக்கூடாது. பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் தலையை விரித்துப் போடக்கூடாது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை கூட்டி குப்பையை வெளியே போடக்கூடாது. பெண்கள் எப்போதும் வீட்டில் அழுது கொண்டே இருக்கக் கூடாது மேலும் சண்டை சச்சரவுகளும் இருக்கக் கூடாது. உப்பை ஒரு போதும் தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது அதனை கீழே சிந்தக்கூடாது. புதிதாக ஏதாவது ஒரு துணி தைக்கும் போது கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு அந்த வேலையை பார்க்க கூடாது. எந்த ஒரு பொருளும் வீட்டில் இல்லை என்ற வார்த்தையை சொல்லக்கூடாது இந்த பொருளை வாங்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இல்லை என்று சொன்னால் அந்த பொருள் ஒருபோதும் நம் வீட்டில் இல்லாமலேயே போய்விடும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக ஒலிக்க வேண்டிய பாடல்கள்

அனுமனை அழைக்க ஸ்ரீராமஜெயம் சொன்னால் போதும் அதேபோல் ஸ்ரீமன் நாராயணனனை வீட்டிற்கு அழைக்க அவருடைய பெருமையை பேசும் பாடல்களை ஒழிக்க வைக்க வேண்டும் ஏனென்றால் ஸ்ரீமன் நாராயணனின் பாடல்களை கேட்டால் மகாலட்சுமி தேவி நம் வீட்டிற்கு ஓடோடி வருவாள். எனவே தினமும் காலை நேரத்தில் வெங்கடேசன் சுப்ரபாதமும் மாலை நேரத்தில் மகாவிஷ்ணு சஹஸ்ர நாமமும் வீட்டில் ஒலிக்க வேண்டும்.

தினந்தோறும் வீட்டில் விளக்கு ஏற்றுதல்

மகாலட்சுமி தேவியாருக்கு தீபம் மிகவும் பிடிக்கும் எனவே வீட்டில் தினமும் விளக்கேற்றி வீட்டை மங்களகரமாக வைத்திருந்தால் மகாலட்சுமி தேவியார் ஓடோடி வந்து விடுவார். தினமும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் மேலும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கு ஏற்றுதல் மிகவும் சிறப்பு.

-விளம்பரம்-

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் தண்ணீர் கொடுப்பதும் சிறந்தது. சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுப்பதால் நம்முடைய நீண்ட நாள் பாவங்கள் யாவும் தீர்ந்து போய்விடும்.வீட்டு வாசலில் போட்ட கோலத்தின் மேல் பசு கோமியம் இட்டாலும் சாணம் இட்டாலும் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமியின் அருளும், செல்வமும் வீட்டில் பெருக துளசியை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!