- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பொதுவா என்னதான் பார்த்து பார்த்து சமைச்சாலும் கண்டிப்பாக கொஞ்சம் சாதமாவது மீதமாகிடும் அந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பழைய சாதமாக சாப்பிடலாம். ஆனா அப்படி பழைய சாதம் சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு அப்படின்னா அந்த சாதத்தை வைத்து ஒரு சூப்பரான போண்டா செய்யலாம். காலையில் செய்த சாதம் மீந்து போச்சு அப்படின்னா ஈவினிங் டைம்ல அதை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் இந்த சுவையான போண்டா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இது கூட ஒரு கார சட்னி வச்சு கொடுத்துட்டீங்கன்னா ஈவினிங் டைம்ல ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிட்ட ஃபீல் கிடைக்கும்.
இந்த பழைய சாதத்தை கூட ரெண்டே உருளைக்கிழங்கு இருந்துச்சுன்னா அதை சேர்த்துக் கொள்ளலாம் செம டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை செய்து பாருங்கள் அதுக்கப்புறமா அடிக்கடி நீங்க இந்த ரெசிபியை செய்வீர்கள். இந்த டேஸ்டான ருசியான பழைய சாதம் போண்டா கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் செஞ்சு கொடுக்கலாம் பழைய சாதத்தில் செஞ்சது அப்படின்னு சொன்னா நம்பவே மாட்டாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான பழைய சாதத்தில் செய்த பழைய சாத போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பழைய சாதம் சேர்த்து உருளைக்கிழங்கு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
அதனுடன் உப்பு அரிசி மாவு நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சூடான எண்ணெயில் சிறிதாக சேர்த்து அனைத்தையும் பொறித்து எடுத்தால் சுவையான பழைய சாத போண்டா தயார்.






