- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
லெமன் கிராஸ் சிக்கன் ப்ரை அப்படி என்றால் என்ன என்று யோசிக்கிறீங்களா இதுக்கு நம்ம மசாலா அரைக்கும் போது அது கூட எலுமிச்சை தண்டு அப்படின்னு சொல்லப்படுற லெமன் கிராஸ் சேர்த்து அரைத்து மசாலா தயார் செஞ்சு அதுல சிக்கன் போட்டு ஊற வைத்து செய்ய போறோம் நிறைய சிக்கன் பிரை ரெசிபி செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த சிக்கன் ப்ரை ரொம்ப வாசனையா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். லெமன் கிராஸ்ல ஸ்மெல் ரொம்ப ரொம்ப சூப்பரா வரும். எப்பவுமே நம்ம ஹோட்டல் போனாலும் சரி வீட்லயும் சரி, சிக்கன் 65 செஞ்சா அது மேல கொஞ்சமா எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடும் போது டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். அந்த வகையில இந்த மாதிரி ஒரு தடவை லெமன் கிராஸ் சேர்த்து சிக்கன் ஃப்ரை ரெசிபி செஞ்சு பாருங்க.
நீங்க நினைச்சு பார்க்காத அளவுக்கு டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இது சேர்த்து செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிக்கலாம் வேண்டாம் கண்டிப்பா சூப்பராக இருக்கும் அதுலயும் இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம். அந்த மசாலா நல்லா கெட்டியா இருக்கும் தண்ணி ஊத்தாம அரைச்சு அதுல சிக்கன ஊறவெச்சு சோள மாவு எல்லாம் போட்டு நல்லா அரை மணி நேரம் ஊற வைத்து இதை செய்யும்போது நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். இதை பிரிட்ஜ் குள்ள கூட வச்சு ஊற வைக்கலாம் எப்படி செஞ்சாலும் டேஸ்ட் ரொம்பவை சூப்பரா இருக்கும்.
இந்த சுவையான ரெசிப்பிக்கு கண்டிப்பா எல்லாரும் போட்டி போட்டுட்டு வந்து சாப்பிடுவாங்க இதை செஞ்சு வச்சுட்டு திரும்புறதுக்குள்ள ஃபுல்லா காலி ஆயிடும் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல செய்து சாப்பிட்டு பாருங்க. இந்த மாதிரி ஒரு சிக்கன் பிரை நீங்க வாழ்க்கையில் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். என்னதான் நிறைய அசைவ வகைகள் இருந்தாலும் சிக்கன் தான் நிறைய பேருக்கு ஃபேவரட். அப்படி இருக்கும்போது இந்த ரெசிபியை செஞ்சு பார்த்தீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான லெமன் கிராஸ் சிக்கன் பிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு வெங்காயம் லெமன் கிராஸ் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது மஞ்சள் தூள் மல்லித்தூள், கரம் மசாலா சோம்பு, உப்பு சேர்த்து சிக்கனை சேர்த்து கலந்து கொள்ளவும்.
சோள மாவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
சூடான எண்ணெயில் கலந்து வைத்துள்ளதை போட்டு பொரித்தெடுத்தால் சுவையான லெமன் கிராஸ் சிக்கன் ப்ரை தயார்.






