- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
சிக்கன் எடுத்தா வீட்ல எப்பவுமே சிக்கன் குழம்பு, சிக்கன் பிரட்டல், சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு தடவை சிக்கன் எடுத்தா இந்த மாதிரி ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் லெமன் பெப்பர் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். உங்க வீட்ல ஃபிரைடு ரைஸ் மிளகு சாதம் இந்த மாதிரி ரொம்ப ரொம்ப மசாலாக்கள் சேர்க்காம ஏதாவது ஒரு ரைஸ் செஞ்சீங்கன்னா அதுக்கு இதை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்ளோ ருசியாக இருக்கும்.
சைடு டிஷ் ஆக மட்டுமில்லாமல் இதனை அப்படியே கூட ஈவினிங் டைம்ல சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு ரெசிபி. வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள். கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா செஞ்சு பாருங்க.
உங்களுக்கு யாரையாவது ரொம்ப பிடிக்கும்னா அவங்களுக்கு அந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். இதுல எலுமிச்சை பழத்தை அப்படியே ஸ்லைஸ் ஆக சேர்க்கப் போறதால அதோட வாசனையோட பட்டரோட மணத்தோட சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இதுக்கு எண்ணெயே சேர்க்காமல் பட்டர் சேர்த்து செய்ய போறோம். அதனால கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான லெமன் பெப்பர் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் பட்டர் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியதும் சிக்கனை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து எலுமிச்சை பழத்தை ஸ்லைசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான லெமன் பெப்பர் சிக்கன் தயார்.






