நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு விஷயங்களுக்கும் நவகிரகங்கள் காரணமாக இருக்கிறது நவகிரகங்களுடைய பரிபூரணமான ஆசீர்வாதம் நமக்கு கிடைத்தாலே நமக்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்படாது. நவகிரகங்களுடைய அருளை பெற வேண்டும் என்பவர்கள் நவக்கிரகங்களுக்காக சில பரிகாரங்களையும் வழிபாடுகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த வகையில் நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் சில உகந்த எண்கள் இருக்கும் ஒன்றிலிருந்து 9 வரையில் இருக்கக்கூடிய அனைத்து எண்களுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களுடைய ஆதிக்க நிலை கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் அந்த எண்களினால் நமக்கு நன்மைகளும் பணவரவும் கூட ஏற்படும் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
அதிஷ்ட எண்
ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்ஷ்டமான எண் இருக்கும். அந்த எண்களை நமக்கு தேவையான காரியங்களுக்கு பயன்படுத்திக் கொண்டால் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது ஒரு விதமான ஐதீகம் என்று கூட சொல்லலாம். ஒரு சிலர் அதிர்ஷ்டமான எண்களை தான் அவர்களுடைய முக்கியமான ஒரு சில விஷயங்களுக்கு பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய சொந்த ஜாதகத்தின் படி அதிர்ஷ்டமான சில எண்கள் இருக்கும். ஜாதகம் இல்லாதவர்களுக்கு கூட அவர்களுடைய பெயரின் அடிப்படையில் அதிர்ஷ்ட எண்களை ஜோதிடர்கள் கணித்து விடுவார்கள். அதிர்ஷ்ட எண் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உண்டான ஒரு சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். அதிர்ஷ்ட எண் தெரியாது என்பவர்கள் கூட ஒரு எண்ணை வெள்ளிக்கிழமை தோறும் எழுதினால் நிச்சயமாக யோகம் அமையும்.
அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய எண்
பண வரவை கொடுக்க கூடிய எண் என்னவென்றால் ஏழு எட்டு ஆறு. இந்த எண்ணை இஸ்லாமியர்கள் பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். இந்த எண்ணை நாம் வெள்ளிக்கிழமை என்று பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது இரவு 9 மணிக்கு மேல் ஒரு வெள்ளை நிற பேப்பரில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி ஏழு முறை எழுத வேண்டும். ஏழு முறை எழுதும் போதும் நமக்கு நிறைய பணம் சேர்ந்து விட்டது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.
பரிகாரத்தின் பலன்கள்
முதலில் ஏழு முறை இந்த எண்ணை எழுத வேண்டும் பிறகு எட்டு முறை எழுத வேண்டும் பிறகு ஆறு முறை எழுத வேண்டும்.எழுதும்போது நம்முடைய கோரிக்கைகளை சொல்லிக்கொண்டே எழுத வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும் இதன் மூலம் நமக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய யோகமும் பணவரவும் அதிகரிக்கும் உள் நம்பிக்கையோடு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக பணவரவு அதிகரித்து யோகம் உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : பணத்தின் நான்கு மூலையிலும் இதை தடவி வைத்து பாருங்க! பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்!