பொதுவா நம்ம சிக்கன் 65 மீன் ப்ரை இதெல்லாம் செய்யும் போது சிவப்பு கலர்ல நல்லா கலர் தூக்கலா இருந்தா தான் நமக்கு சாப்பிடவே பிடிக்கும். ஆனா இன்னைக்கு நம்ம கிரீன் மீன் ப்ரை தான் பாக்க போறோம். பச்சை கலர்ல மசாலா அரைச்சு அதை மீன்ல தடவி பொரிச்சு எடுக்கும் போது அதோட வாசனையே தனியா இருக்கும். என்னதான் நம்ம கடையில விக்கிற மசாலா வாங்கி மீன்ல தடவி ஊற வச்சு பொரிச்சு எடுத்தாலும் அதுல ஆரோக்கியமே இருக்காது. ஆனா வீட்டிலேயே அரைச்சு வைக்கிற மசாலாவுல நிறைய வாசனையும் சத்துக்களும் இருக்கு.
கடையில கிடைக்கக்கூடிய பொடியில என்னென்ன பொருட்கள் சேர்க்குறாங்க அப்படின்னு நமக்கு தெரியாது. அதனால இனிமேல் கடைல கிடைக்கக்கூடிய பொடியில மீன் பிரை செய்யாம வீட்டிலேயே அரைச்சு வைக்கக்கூடிய இந்த மசாலா வச்சு ஒரு சூப்பரான கிரீன் மீன் ப்ரை செஞ்சு பாருங்க. இது ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். கிரீன் சிக்கன் செஞ்சு சாப்பிட்டிருப்பீங்க ஆனா கிரீன் மீன் ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஒரு தடவை அதையும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல காரத்துக்காக நம்ம பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்க போறோம். அதனால குழந்தைகளுக்கு தாராளமா சாப்பிட கொடுக்கலாம். நிறைய சத்துக்கள் இருக்கக்கூடிய மீன்ல இந்த மாதிரி ஒரு மசாலா அரைச்சு மீன் ஃப்ரை செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும்.
நம்ம இந்த கிரீன் மசாலாவில் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்க்கிறதால இதுல இருக்கக்கூடிய அனைத்து ஆரோக்கியங்களும் மீன்ல போய் சேர்ந்து சாப்பிடறவங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். கருவேப்பிலை இலையும் கொத்தமல்லி இலையும் ரத்தத்தை சுத்தம் பண்ற ஒரு குணம் இருக்கு அதனால அதுல அரைச்சு வைக்கக் கூடிய இந்த கிரீன் மீன் மசாலா அவ்வளவு ருசியாவே இருக்கும். டேஸ்டான ருசியான இந்த கிரீன் மீன் ஃப்ரை உங்க வீட்ல கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கானாங்கெளுத்தி க்ரீன் ஃப்ரை | Mackerel Fish Green Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கி கானாங்கெளுத்தி மீன்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 6 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- மீனை கழுவி சுத்தம் செய்து கீறல் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் கருவேப்பிலை மஞ்சள் தூள் கொத்தமல்லி இலைகள் நறுக்கிய இஞ்சி பூண்டு மிளகு சோம்பு எலுமிச்சை சாறு பச்சை மிளகாய் உப்பு அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
- அதனை மீனில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையான கிரீன் மீன் ப்ரை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கானாங்கெழுத்தி மீன் புட்டு இப்படிதான் செய்யணும்!!