கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். அதுவும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால், கடன், வட்டி, வட்டிக்கு குட்டி போட்டு அந்த வட்டி குட்டி போட்டு நம் தலையை அடமானம் வைத்தால் கூட அந்த கடனை நம்மால் அடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. கடன் தீர சக்தி வாய்ந்த பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம்.

மைத்ரேய முகூர்த்தம்
அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்’ எனப்படுகின்றன. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்தும் அன்பர்களுக் குத் தீர்வாக பரிகாரமாக விளங்கும் அபூர்வமான ஒரு முகூர்த்தம் உண்டு. அதுதான் மைத்ர முகூர்த்தம் ஆகும். இந்த முகூர்த்த நேரத்தில் கடனில் சிறு பகுதியை, திருப்பி அளித்தாலும் போதும், விரைவில் மொத்த கடனும் அடைபடுமாம்!
இந்த மாதத்தில் நவம்பர் 14 செவ்வாய்க்கிழமை காலை 6.23 முதல் 8.35 வரை மற்றும் நவம்பர் 24 வெள்ளிக்கிழமை 4.01 முதல் 5.06 வரை மைத்ரேய முகூர்த்தம் உள்ளது.
பரிகாரம் செய்யும் முறை
முதலில் மொய்க்கவர் மற்றும் பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரியாணி இலை பல தாந்திரீக விஷயங்களுக்கு பயன்படும் முக்கிய பொருள்களுள் ஒன்று. இந்த இலையை நாம் பயன்படுத்தும் பொழுது நாம் செய்யும் பரிகாரம் உடனடியாக பலனளிக்கும். பிரியாணி இலையில் உங்களுடைய கடன் தொகை மற்றும் உங்களுடைய கடன் தீர வேண்டும் என எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் ஒரு சிறிய தொகையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 100 ரூபாயோ அல்லது 500 ரூபாயோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வாசனை பொருட்களான ஜவ்வாது, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் இதில் ஏதேனும் ஒன்றை அந்த கவரில் வைத்து விடுங்கள்.
இந்த கவரை சாமியின் புகைப்படத்திற்கு முன்னால் அல்லது பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒருவேளை நாம் கடனை அடைத்து விட்டோம் என்றால் நாம் எடுத்து வைத்திருக்கும் பிரியாணி இலையை கால்படாத இடத்தில் எரித்து விட வேண்டும் மற்றும், அந்த பேப்பரை கிழித்துப் போட்டு விட வேண்டும். இதனையும் நாம் மைத்ரேய முகூர்த்த நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் சாதரணமான செடி! இந்த செடி வீட்டில் இருந்தால் போதும் கடன் பிரச்சனை வராது!


