சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

- Advertisement -

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்களுக்கு எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்கின்ற சந்தேகம் இருக்கும். பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் ஆனால் சூழ்நிலை காரணமாக அதில் அரைமண்டலம் அதாவது 24 நாட்கள் கூட விரதம் இருக்கலாம் மேலும் 30 நாட்களும் கூட விரதம் இருக்கலாம் ஆனால் கோவிலுக்கு செல்லக்கூடிய அந்த இரண்டு நாட்கள் மட்டும் மாலை போட்டு விரதம் இருக்கலாம் என்று நினைத்தாள் அது தவறு அப்படி செய்யக்கூடாது மேற்குறிப்பிட்ட அந்த நாட்கள் அளவிற்கு விரதம் கண்டிப்பாக இருக்க வேண்டும் பொதுவாக விரதம் என்பது புலன் அடக்கத்தையும் தன்னடக்கத்தையும் கொடுப்பது அதில் சபரிமலை ஐயப்பனுக்கு நல்ல முறையில் விரதம் இருந்து உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அந்த ஐயப்பனின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

மாலை போடும் விதம்

மாலை போடுபவர்கள் அவர்களுடைய குருசாமியின் வழிகாட்டுதலின்படி மாலை போடுவது வழக்கம் ஆனால் குருசாமி வெளியூரில் இருப்பது போன்ற சூழ்நிலைகள் உள்ளவர்கள் ஏதாவது ஒரு கோவிலில் சென்று மாலை போட்டுக் கொள்ளலாம் மாலை போடும்போது துளசி மாலையும் ருத்ராட்சமும் சேர்ந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை போட்டு விரதம் இருக்கும் அந்த நாட்கள் முழுவதும் நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமம் இவை அனைத்தும் இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை மாலை என இரண்டு முறை குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி இரு வேலைகளிலும் ஐயப்பனுக்கு சரணம் சொல்ல வேண்டும் 108 சரணம் கண்டிப்பாக கூறவேண்டும்.

- Advertisement -

ஒருவேளை நாம் பயணத்தில் இருந்தால் அப்பொழுதும் கூட முகத்தை கழுவி விட்டு ஐயப்பனுக்கு சரணம் சொல்ல வேண்டும். குறிப்பாக மாலை போட்டு விரதம் இருக்கும் நாட்களில் செருப்பு அணியக்கூடாது என்று சொல்வார்கள் காரணம் சபரிமலைக்கு செல்லும் போது செருப்பு போட முடியாத சூழல் ஏற்படும் அதற்கு முன் பயிற்சி செய்வதற்காகவே நாம் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும் ஆனால் வேலை காரணமாக செப்பு போட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்பொழுது போட்டுக் கொள்ளலாம். மாலை போட்டவர்கள் பொதுவாக காவி நிறத்தில் தான் உடை அணிய வேண்டும் கன்னி சாமிகளாக இருந்தால் கருப்பு மற்றும் நீல நிறத்தில் உடை அணிய வேண்டும் அப்பொழுதுதான் அடுத்தவர்கள் நம்மிடம் வந்து பேசும் பொழுது தேவையில்லாத விஷயங்களை பேச மாட்டார்கள் நம் மீது ஒரு தனி மரியாதை உண்டாகும். மாலை போடுபவர்களின் வீட்டில் உள்ள பெண்களின் மாதவிலக்கு தேதிகளை அறிந்துகொண்டு மாலை போடுவது சிறந்தது அதையும் மீறி பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் வேறு எங்காவது போய் விட வேண்டும். ஏனென்றால் மாலை போட்ட நேரத்தில் வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். மாலை போட்டு ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் அந்த காலங்கள் தவக்காலம் என்று அழைக்கப்படும் எனவே தங்களுடைய வசதிகளை எல்லாம் தவிர்த்து தலையணை இல்லாமல் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும் முழுவதுமாக ஐயப்பனின் சிந்தனையோடு மட்டுமே இருக்க வேண்டும்.

விரதம் இருக்கும் முறை

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு சாப்பிடுவார்கள் ஆனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் இரண்டு வேலைகள் சாப்பிட்டுக் கொள்ளலாம் பட்டினி என்பது நம் உடலை சீராக்கும் மேலும் பட்டினி கிடக்கும் மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ள உதவும் எனவே உங்களின் விருப்பப்படி நீங்கள் விரதம் இருந்து கொள்ளலாம் அந்த விரதம் இருக்கும் நாட்கள் முழுவதும் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் அது ஆரோக்கியத்திற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.

மாலை அணிந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய குணங்கள்

ஐயப்பனுக்கு மாலை அணிந்து நாம் இருக்கும் விரதம் நம்மை பக்குவப்படுத்தக்கூடிய ஒரு யாத்திரை என்று அழைக்கப்படும் அதனால் அந்த சமயத்தில் கோபப்படக்கூடாது தேவையற்ற வம்புக்கு வீண் வம்புக்கு போகக்கூடாது ஆபாசமான வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது மனதில் பகை வஞ்சனை பொறாமை போன்றவற்றை தவிர்த்து நல்ல எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். தீய பழக்கங்களான புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் ஒரு சிலர் தீய பழக்கங்களை விட வேண்டும் என்பதற்காகவே ஐயப்பனுக்கு மாலை அணிவார்கள். மனைவி குழந்தைகளிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் நம்மிடம் வேலை பார்க்கும் பணியாளர்களிடமும் மரியாதையான வார்த்தைகளை கூற வேண்டும் இம்மாதிரியாக செய்வதற்கான அர்த்தம் என்னவென்றால்,

-விளம்பரம்-

நம் வாழ்க்கை முழுவதும் இந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே விரதம் இருக்கும் நாட்களில் இதை செய்கிறோம். அன்னதான பிரியரான ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பொழுது கோவிலுக்கு செல்லும் முன்பு அன்னதானம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும் நம் விரதமும் முழு மனதாக பூர்த்தி அடையும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது எடுத்துச் செல்லும் இருமுடியில் முன்முடி பின் முடி என இரண்டு முடிகள் இருக்கும் அதில் ஒன்று பாகமூட்டை மற்றொன்று புண்ணிய முட்டை எடுத்துச் செல்லும் பாவத்தையும் புண்ணியத்தையும் கோவிலிலே விட்டு வர வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் நன்றாக கடைபிடித்து விரதம் இருக்கும் நாட்களில் ஐயப்பனை மட்டுமே முழுமனதாக நினைத்து பக்தியோடு விரதத்தை முடித்தால் சபரிமலை ஐயப்பனின் அருள் நிறைந்த தரிசனம் நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் தங்களுடன் தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன் தெரியமா ?