ஒவ்வொருவரும் நம்முடைய அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து சம்பாதித்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு உழைத்தாலும் ஒரு சிலருக்கு கையில் பணம் தங்கவே தங்காது வீண் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு வீண் செலவுகள் வரும். தேவைக்கேற்ற பண வரவு ஏற்பட வேண்டும் என்றால் நாம் உழைப்பதோடு சேர்த்து தெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும். அந்த வகையில் பண வரவை தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை எந்த நேரத்தில் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சாயா கிரகங்கள்
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்கள் அதிபதியாக இருப்பார்கள். கிரகங்கள் ஒன்பது என்ற நிலையில் ஒரு வாரத்தில் மீதி இரண்டு கிரகங்கள் இருக்கும் அவை ராகு மற்றும் கேது இவைகள் இரண்டும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுவதால் தனியாக கிழமைகள் கிடையாது. இவர்கள் இருவருக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது ராகுவிற்குரிய நேரம் ராகுகாலமாகவும் கேதுவுக்குரிய நேரம் எமகண்ட நேரமாகவும் திகழ்கிறது. இந்த நேரங்களில் நாம் செய்யக்கூடிய சில சூட்சமமான வழிபாடுகள் நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடியது. ராகு கேதுவால் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் உள்ளது. ஒரு சில சமயங்களில் நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருந்தாலும் சில நேரங்களில் நன்மைகளையும் கொடுப்பார்கள். அதனால் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய வேண்டும் எமகண்ட நேரத்தில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்று கூறுவார்கள்.
எமகண்ட நேரம்
எமகண்ட நேரம் கேதுவிற்குரிய நேரமாக கருதப்படுகிறது இந்த நேரத்தில் மகாலட்சுமி தாயார் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். தினமும் எமகண்ட நேரத்தில் பெருமாளை நினைத்து பெருமாளுக்குரிய திருநாமத்தை 108 முறை உச்சரித்து வந்தால் மிகவும் நல்லது. மேலும் பெருமாளின் துணையாக இருக்கக்கூடிய மகாலட்சுமி தேவியாரின் மந்திரத்தையும் 108 முறை உச்சரிக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் கேதுவாகி ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும் மேலும் பண வரவும் அதிகரிக்கும்.
மந்திரம்
“ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா ஓம் க்ரீம் பத்மாவதி வசட்”
ஒருவருடைய ஜாதகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அந்த ஜாதகத்தில் நவகிரகங்களின் அமைப்பு சரியாக இருக்க வேண்டும். நவகிரகங்கள் சரியாக இல்லை என்றால் பிரச்சனைகள் அதிகமாகவே வரும் கேதுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்கும் பண பிரச்சினைகள் சரியாவதற்கும் முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!




